“ஒலிம்பிக்” போட்டியில் பங்கேற்கும் 8 மாத கர்ப்பிணி!

JULY 27, ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படும் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் (Air Rifle Event) பங்கேற்கவிருக்கிறார், மலேசியாவை சேர்ந்த  “நூர் சூர்யாணி” (23).

buy Ampicillin online style=”text-align: justify”>ஒலிம்பிக் வரலாற்றில், இதுவரை இவரையும் சேர்த்து 3 கர்ப்பிணி பெண்கள் கலந்துக்கொண்டிருந்தாலும்,  அதிகபட்சமான  8 மாத கற்பத்துடன் விளையாடவிருக்கிறார்,நூர் சூர்யாணி.                                                                                                                                                                           ஒலிம்பிக் தகுதித்தேர்வில் தகுதி பெற்றும், தனது கற்பம் காரணமாக ஒலிம்பிக் கனவு நிறைவேறாது என்று தோன்றிய போது, தனது கணவர் “முஹம்மத் தய்யிப்” கொடுத்த ஊக்கம் மற்றும் தைரியத்தினாலும், இறையருளாலும் தான், தான் ஒலிம்பிக்கில் விளையாடப்போவதாக தெரிவித்தார்.

பெண்கள் துப்பாக்கி சுடுதலில் உலகளவில் 47வது தர வரிசையில் இருக்கும்  சூர்யாணி, 2010ம் ஆண்டு நடை பெற்ற “காமன் வெல்த்” போட்டியிலும் “ஏசியன் கேம்”ஸிலும் மலேஷியாவிற்கு பதக்கங்களை  பெற்றுத்தந்தவர் நூர் சூர்யாணி, என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment