இங்கிலாந்தை சமாளிக்குமா ஆஸி.,: இன்று ஆஷஸ் 3 வது டெஸ்ட்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3 வது போட்டி, இன்று பெர்த்தில் துவங்குகிறது. வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் டெஸ்ட் “டிராவில்’ முடிந்தது. அடிலெய்டில் நடந்த 2 வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட், இன்று பெர்த்தில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையை எட்ட காத்திருக்கிறது ஆஸ்திரேலியா.
பாண்டிங் குழப்பம்:
சொந்த மண்ணில் வெற்றியை எட்ட போராடி வருகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங். காயம் அடைந்த காடிச்சுக்கு பதில், பிலிப் ஹியுஸ் துவக்க வீரராக களமிறங்க உள்ளார். இவர், இந்த முறை அணிக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹசி, நார்த் ஆகியோர் ரன் குவிக்க வேண்டியது அவசியம். பவுலிங் தான் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. முன்னணி பவுலர் ஜான்சன், பார்ம் இன்றி தவித்து வருகிறார். இன்றைய போட்டியில், இவருக்குப் பதில் பீட்டர் சிடில் களமிறக்கப்படலாம். போலிஞ்சர், ஹில்பெனாஸ் அசத்த உள்ளனர். அறிமுக சுழற் பந்து வீச்சாளராக மைக்கேல் பீர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. கடந்த போட்டியில் பெற்ற தோல்விக்கு, இந்த முறை பதிலடி கொடுக்க வேண்டும் என்பதால், விளையாடும் 11 பேரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பத்தில் உள்ளார் கேப்டன் பாண்டிங்.
இங்கிலாந்து Ampicillin No Prescription அபாரம்:
ஸ்டிராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. குக், டிராட், பீட்டர்சன், பெல், கோலிங்வுட் என முன்னணி பேட்ஸ்மேன்கள் சூப்பர் பார்மில் உள்ளனர். பவுலிங்கில் ஆண்டர்சன், பின், சுவான் ஆகியோர் அசத்தி வருவது இங்கிலாந்து அணிக்கு பக்கபலமாக உள்ளது. கடந்த 2 போட்டிகளில் அசத்திய இங்கிலாந்து அணி, இன்று துவங்கும் 3 வது போட்டியிலும் முத்திரை பதிக்க காத்திருக்கிறது.

Add Comment