ஸ்கூல் பெஞ்சை விற்று ‘தண்ணி’ அடித்த மாணவர்கள்!

மதுரையில் பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Buy cheap Lasix class=”alignleft size-full wp-image-29439″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/07/17.jpg” alt=”” width=”300″ height=”225″ />மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஒரு நாள் அவர்களுக்கு மது அருந்த பணம் இல்லை. வீட்டிலும் கேட்க முடியாது. அதனால் பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளனர். உடனே அவர்களின் நினைவுக்கு வந்தது பள்ளிக்கூட பெஞ்ச் தான். அன்றைய தினம் பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகு அந்த 5 பேரும் சேர்ந்து ஒரு பெஞ்சை பல துண்டுகளாக்கினர்.

அந்த துண்டுகளை எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து பணம் பெற்றனர். பணம் கிடைத்தவுடன் நேராக டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்து மகிழ்ந்தனர். இந்த சம்பவம் குறித்து தெரிய வந்த தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் நொந்து கொண்டனர்.

இந்நிலையில் அப்பள்ளியில் புத்துணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. அப்போது பேசிய தலைமை ஆசிரியர் கூறுகையில்,

அண்மை காலமாக மாணவர்கள் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் ஆசிரியர்களின் நேரம் வீணாகிறது.

பள்ளியில் உள்ள பெஞ்சைத் திருடி விற்று மது அருந்திய மாணவர்களின் பெற்றோரை அழைத்து விவரத்தை தெரிவித்தேன். அந்த குற்றத்தைச் செய்த மாணவர்களில் பிளஸ் டூ மாணவர் ஒருவரும் அடக்கம். அவரின் பெற்றோர் திருப்பூரில் உள்ளனர். அவர் வாடிப்பட்டியில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டில் தங்கி படிக்கிறார்.

அவர்கள் விற்ற பெஞ்சின் விலை ரூ.2,500 ஆகும். அந்த பெஞ்சிற்கு பதிலாக புதியது ஒன்று வாங்கிக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்களும் சம்மதித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் 6வது படிக்கும் மாணவன் ஒருவன் 1வது வகுப்பு மாணவனை தாக்கி அவன் பாக்கெட்டில் இருந்த காசை பறித்துள்ளான்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று பெற்றோர்கள் நினைக்கக் கூடாது. அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றார்.

Add Comment