மீண்டும் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி மாணவி பலி!

ஆம்பூர் அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது Lasix online செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் 2 ம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி என்ற மாணவி பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவத்திற்கு காரணமான பள்ளி முதல் வர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்துவருகிறது.

சென்னை சிறுமியின் பஸ் பயண மரணம் மனதை விட்டு அகலாத நேரத்தில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நேற்று தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி இறந்த செய்தி அனைவரது நெஞ்சை பதற வைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு துயர சம்பவம் நடந் துள்ளது. ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (35). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மூத்த மகள் ஸ்வேதா (4), இளைய மகள் சுஜிதா (3). இருவரும் வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளி யில் படித்து வருகின்றனர்.

சுவேதா யூகேஜி, சுஜிதா எல்கேஜி படித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஈச்சம்பட்டில் இருந்து பள்ளி பஸ் மூலம் தினமும் சென்று வந்தனர். வழக்கம்போல் நேற்று மாலை இருவரும் பள்ளி பஸ்சில் வீடு திரும்பினர். பஸ்சை வாணியம்பாடி கோணாமேட்டை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன் (60) என்பவர் ஓட்டி வந்தார். ஈச்சம்பட்டு மெயின் ரோட்டில் நின்ற பள்ளி பஸ்சில் இருந்து சுஜிதா, சுவேதா ஆகியோர் இறங்கினர்.

பின்னர், இருவரும் பஸ்சின் முன்பக்கமாக சென்று சாலையை கடக்க முயன்றனர். இதை சரியாக கவனிக்காத டிரைவர் கிருஷ்ணன் பஸ்சை வேகமாக முன்னோக்கி இயக்கினார். அப்போது, சாலையை கடந்து கொண்டிருந்த சகோதரிகள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் மோதியது. இதில், பஸ்சின் முன்சக்கரத்தில் சுஜிதா சிக்கி பரிதாபமாக இறந்தாள். சுஜிதாவின் உடல் சுமார் 20 அடி தூரத்துக்கு சக்கரத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. சுவேதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலியானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் கிருஷ்ணன், பஸ்சை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கம் இருந்தவர்கள் பஸ்சை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பஸ்ஸின் டிரைவர் கிருஷ்ணன், வாணியம்பாடியைச் சேர்ந்த கிளீனர் சக்திவேல் (17) ஆகியோரை போலீ சார் கைது செய்தனர். பஸ்சின் உரிமையாளரும் பள்ளி நிர்வாகியுமான சண்முகத்தை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன். குமார் விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் ஈச்சம்பட்டு கிராமமே சோகத்தில் முழ்கி உள்ளது.

Add Comment