கடையநல்லூரில் நாமும் முதலாளிகளே!

“விடிந்தது என நினைத்து விழித்தேன்

விடியவில்லை!

கண்டது கனவு,

கனவு கண்டு கொண்டிருந்த நேரம் இரவு 2.30 மணி.

எழுந்து உட்கார்ந்தேன்.”

காலைல ஊருக்கு போகணும்.தம்பி வேற சவூதில இருந்து முடிச்சிட்டு வருவதா சொல்லிருக்கன்.நான் பட்ட கஷ்டம் என் சகோதரனும் படக் கூடாதே!தம்பி வந்ததும் நடந்ததை எடுத்துக் கூறி நடப்பதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க வேண்டும்.என்ன நடந்தது என்ன நடந்து கொண்டிருக்கிறது நடக்கப் போறதைப் பற்றி என்ன முடிவு எடுக்கப் போறோம்னு தெரிஞ்சுக்க எல்லோருக்கும் ஆவலாக இருக்கும்.

நான் சுமார் 15 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றினேன்.நான் துபாயில் இருந்த காலத்தில் என் மனைவி மீது முழு நம்பிக்கை வைத்திருந்தேன்.சில நேரங்களில் என்னைப் பெற்ற தாய் சொல்வதைக் கூட கேட்காமல்,அவள் சொல்வது சரி என்று தோன்றாத அளவுக்கு என் மனைவி சொல்லே மந்திரம் என்று எண்ணி, என்னை பெற்ற தாய்க்கு 40 % பணமும்,நான் கட்டிய மனைவிக்கு 60 % பணமும் மாதம் தோறும் செலவிற்காக அனுப்பி வந்தேன்.சில நேரங்களில் என் தாய்க்கு அனுப்பக் கூடிய பணத்தின் அளவு குறையுமே தவிர என் மனைவிக்கு செலவிற்காக அனுப்பிய பணத்தில் குறைவாக ஒரு போதும் அனுப்பியது கிடையாது.

நான் இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தை என் மனைவி நல்ல முறையில் சேமித்து,நல்ல வழியில் சிக்கனமாக  செலவு செய்திருப்பாள் என நம்பியிருந்தேன்.நான் இத்தனை காலம் துபாயில் எனக்காக  சம்பாதித்த சொத்து சுகரும (sugar),பிரஷரும்(pressure) தான்.நான் மாதம் தோறும் அனுப்பிய பணத்தில் என் மனைவி, மாதமொரு மாடலில் சேலை,தங்க நகை என்று மிகவும் சந்தோசமாக இந்த உலக வாழ்கையை மனம் போன போக்கில் வாழ்ந்துள்ளாள்.

நான் உடல் நலக் குறைவால் துபாயில் இருந்து வேலை செய்ய முடியாமல் ஊருக்கு போவதென முடிவு செய்தேன்.இந்த முடிவை என் மனைவியிடத்தில் கூறினேன்.ஆவலோடு பணம் காசு சம்பாதித்தது எல்லாம் போதும்.உடல் ஆரோக்கியம் தாங்க வேணும்.நீங்க நல்லபடியா ஊருக்கு வாங்க,இருக்க பணத்துல நாம ஏதாவது பொட்டிகடை வச்சாவது பொளைசுக்கலாம் என்று பாசத்தோடு சொல்லுவாள் என்று ஆவலோடு எதிர்பார்த்து நம்பினேன்.

ஆனால்,என் அன்பு மனைவியோ,நீங்க இப்போதைக்கு ஊருக்கு வரவேண்டாம்.நாமா ஊரில முடிச்சுட்டு வந்தவங்க நிலைமையை பார்த்திங்களா.அவங்க எல்லாரும் என்ன பாடு படுராங்கனு.அப்படியே வந்தாலும் ஊருல இருக்கவங்க நம்மள மதிக்க கூட மாட்டாங்க.அப்புறம்,பழையமாதிரி திரும்பி வெளிநாட்டுக்கே போயிட்டு இருக்காங்க.இந்த நிலமையில நீங்க ஊருக்கு வந்தீங்கன்னா நமக்கும் அந்த கதிதான்.நீங்க இப்போ இருக்கிறது நல்ல கம்பெனி தான்.கண்டிப்பா ஊருக்கு வரக்கூடாது.உடம்புக்கு சரியில்லன்னா அங்க தமிழ் நாட்டு டாக்டர் இருக்காங்கன்னு நீங்கதானே சொல்லிருக்கிங்க.அப்புறம் என்ன நீங்க அவருகிட்டே காட்டி சரி பண்ணிக்கோங்க என்று சொல்லி என்னிடம் சண்டை போட்டாள்.நான் அதன் பின்பு எபோது போன் செய்தாலும் என் நம்பரைப் பார்த்ததும் போனை எடுப்பது கூட கிடையாது.

நாட்கள் கடந்தன.2,3 நாட்கள் கழித்து,ஒருநாள் இரவு எனக்கு தூக்கம் வரவில்லை.பல்வேறு சிந்தனைகள் என் கண்முன் வந்து சென்றன.யோசித்தேன்.என் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது என்றாலும்,என் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் அதனை நான் செய்ய முடியும் என்று யோசித்தேன்.மறுநாள் கம்பெனிக்கு சென்று EXIT paper கொடுத்தேன். மூன்றேதினங்களில் ஊர்வந்தேன்.என் 15 வருட பணிக்காக என் கம்பெனி எனக்கு கொடுத்த settlement பணத்தை என்ன செய்வதென்று யோசித்தேன்.என் தம்பியின் அனுமதி பெற்று அவனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.

நாட்கள் உருண்டோடின,எனக்கு சில நேரங்களில் பணம் நெருக்கடி வரும்போதெல்லாம் என் தம்பியிடம் கூறுவேன்.எனது தம்பி அவனது மனைவியுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி என்னிடம்  கொடுக்க சொல்வான். இதுதான்நிதர்சன உண்மை.ஆனால்,ஒரு முறை என் தம்பியின் மனைவியிடம் இவ்வாறு நான் பணம் வாங்கும் போது என் மனைவி பார்த்து விட்டாள்.எனது சகோதரனின் மனைவிக்கும் எனக்கும் தகாத உறவு இருப்பதாக நா கூசாமல் எனது நண்பர்கள் மற்றும் அவளது சொந்தங்களிடம் சொல்லிவிட்டாள்.இது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது.என்மனம் மிகுந்த வேதனைக்குள்ளனது.என் மனைவியே இவ்வாறு என்ன மனம் நோகச் செய்து விட்டாளே என்று எனக்குள் நானே அழுதேன்.எனக்கு இருக்கிற உடல் நலக் குறைவினால் ஏற்கனவே நான் நொந்து போய் இருக்கின்ற நேரத்தில் இந்த சோதனையும் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும், ஒரு அழகான பெண் குழந்தையும் இறைவன் எனக்கு தந்திருக்கிறான்.அல்ஹம்துலில்லாஹ்!அதனை நினைத்து நான் சிறிது ஆறுதல் அடைந்தேன்.ஒவ்வொரு தொழுகையிலும் நான் அல்லாஹ்விடம் கதறி அழுது முறையிட்டு துஆ செய்தேன்.

சில நாட்கள் கழித்து திடீரென ஒரு போன் வந்தது நான் மன வேதனையுடன் போனை எடுத்து பேசினேன்.என் நண்பர் தான் பேசினார்,நண்பர் என்றால் நமதூரல்ல.வெளியூர் நண்பர்.நான் துபாயில் இருந்த காலத்தில் நான் தங்கியிருந்த அறையை சமமாக என்னுடன் பகிர்ந்து கொண்டவர்.அறையை மட்டுமல்ல என் சுக துக்கங்களையும் தான்.அவரும் இப்போது அவரது சில குடும்ப சூழ்நிலைக்காக ஊர்வந்துள்ளார். நாங்கள் ஒருவருக்கொருவர் தற்போதுள்ள குடும்ப நிலைகளை பகிர்ந்து கொண்டோம். அவர் பேசும் போது கூறினார்,என்னுடைய ஊரில் ஒருகடை ஒன்று வாடகைக்கு வருகிறது.நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து நடத்தலாம் என்றார்.நானும் செய்வதறியாது சரி என்றேன்.சில தினங்களில் நான் வெளியூருக்கு வேலை தேடி செல்கிறேன் என்று என்னிடம் சில காலம் பேசாமல் இருந்த மனைவியிடம் கூறிவிட்டு நான், வண்டலூரில் இருக்கும் எனது நண்பர் வீட்டில் தங்கி கடையை ஆரம்பிபதற்கான வேலையை என் நண்பருடன் இணைந்து செய்தேன்..

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையினால்,நாங்கள் ஆரம்பித்த கடை தற்போது மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.கடையை துவங்குவதற்கு தேவையான பணத்தை நான் என் தம்பியிடம் கொடுத்து வைத்த, கம்பெனியில் நான் ஊருக்கு வரும் போது எனக்குக் கொடுத்த பணத்தில் இருந்து நான் எடுத்துக் கொண்டேன்.இந்த பணத்தை நான் என் மனைவியிடம் கொடுத்திருந்தாலோ அல்லது நான் இந்த பணத்தை என் தம்பியிடம் கொடுத்து வைத்திருந்தது பற்றி என் மனைவியிடம் கூறியிருந்தாலோ அவ்வளவுதான்.நான் வட்டிக்கடன் பட்டாவது நான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தாது மீண்டும் சிட்டை” யைத் தூக்க வேண்டியது தான்.

நாங்கள் ஆரம்பித்த இந்த வண்டலூர் கடையின் மூலம் குடும்பத்திற்கு தேவையான அளவு போதிய வருவாய் கிடைத்து வருகிறது.அது போல என் நண்பருக்கும் கிடைத்து வருகிறது.என் மனைவியிடம் நான் குடும்ப செலவுக்கான பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவள் ஏதாவது குறைகூறிக் கொண்டுதான் இருக்கிறாள்.இருப்பாள்.காரணம் வெளிநாட்டில் கஷ்டப்பட்ட சம்பாத்தியத்தை எந்த வித கஷ்டமும் இல்லாமல் செலவு செய்தவள் இல்லையா..! மாதம் 15 ஆயிரம், 20 Buy cheap Amoxil ஆயிரம் கையில் வைத்து செலவு செய்தவளுக்கு இது கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்…ஆம்.உண்மைதான்.

நான் வண்டலூரில் இருந்து வாரம் இரண்டு நாட்கள் நமது கடையநல்லூருக்கு வருவேன்.ஆனாலும் என் மனைவிக்கு என் மீதுள்ள சந்தேகம் தீர்ந்த பாடில்லை.இந்த மனுஷன் ஏன் அடிக்கடி ஊருக்கு வருகிறார்? வேலை தேடியல்லவா போகிறேன் என்று சொல்லிடு போனார்?என்று. சரிதான்! சந்தேகம் என்னும் கொடிய நோய்க்கு ஏது மருந்து? நாங்கள் கடை வைத்து நடத்தி வருவது என் மனைவிக்கோ, அல்லது என் சொந்த பந்தங்களுக்கோ அல்லது என் நண்பர்களுக்கோ தெரியாது.மாறாக என் தம்பிக்கும் அவனது மனைவிக்கும் மட்டுமே தெரியும்.

இப்போது நான் ஒரு கடைக்கு முதலாளி என்பதனை நினைத்தால்,மனத்திற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.என் தம்பி ஊருக்கு வந்தவுடன் இன்ஷா அல்லாஹ் நானும் என் தம்பியுடன் சேர்ந்து இது மாதிரியான ஒரு நல்ல கடையை துவங்க திட்டமிட்டுள்ளேன்.அவனும் சரி என்று சொல்லிருக்கான்.

நான் என்னுடைய இந்த நிலைமைகளை உங்களுடன் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால்,வெளிநாட்டில் இருந்து வேலையை முடித்து கொண்டு வரும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கா வேண்டும் என்பதற்காகத்தான்.வெளிநாடுகளில் இருந்து EXIT -ல் வரும் நண்பர்களே..நீங்கள் ஊருக்கு போறோமே!அங்க போய் என்ன செய்யப் போறோமோ! என்று பதற்றபடாதீர்கள்.ஊரில் நாம் பிழைப்பதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன.நாம் ஊருக்கு வந்தால் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன்வரவேண்டும்.வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் நடப்பது தவறல்ல.அது கறையாகாமல் வேலை பார்க்க நினைப்பது தான் பெரிய தவறு..

நாம் அவ்வாறு நினைப்பதனால்தான் நமது கடையநல்லூரில் ஏராளமானவர்கள், வியாபாரிகள் என்று சொல்லிக்கொண்டு மாற்று மதத்தவர்கள் தினம் தினம் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் நமது பெண்கள் கொஞ்சிபேசும் நிலைமையை கண்டாலே நெஞ்சம் வலிக்கிறது.இருக்கத்தான் செய்யும்.நமதூர் வாசிகள் அங்கே சொந்தங்களை, பந்தங்களை மேலும் பாசங்களையும் தொலைத்து விட்டு இன்னும் சில பேரு உயிரைப் பணயம் வைத்தும் வேலை செய்து ண்டிருக்கிரார்கள். அப்படி உதிரம் சிந்தி சம்பாதித்த செல்வங்களை இப்படி பால் விற்க வருபவனிடதிலும்,மேலும் துணி வியாபாரம் செயபவர்களிடதிலும்,இன்னும் பல பல வியாபாரிகளிடதிலும் செலவு செய்வது மட்டும் இல்லாமல் மானத்தையும் இழக்க நேரிடும்!

நமது கணவன்மார்கள் வெளிநாட்டில்தானே இருக்கிறார்கள்.அவர்களுக்கு இதெல்லாம் என்ன தெரியப்போகிறது என்று எண்ணிகொண்டல்லவா இது மாதிரியான சம்பவங்களை

நமதூர் பெண்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு வேளை எப்படியோ அது கணவன் மார்களின் காதுகளுக்கு போனால்,அவர்களோ எனது மனைவியை பற்றி எனக்கு தெரியும்.நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் என்று தத்தமது மனைவிமார்களிடத்தில் அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக சில உண்மைகள் அவர்களுக்கு கசப்பாக தோன்றுகின்றன. நாம் நமது குடுபத்தினரிடம் இது போன்ற விசயங்கள் தொடராமல் இருக்க கொஞ்சம் கண்டிப்பான முறையில் நடந்து கொள்ளவேண்டும்.

1) நாம் மாதா மாதம் மனைவிக்கு அனுப்பும் பணத்தினை அவள் சரியான வழியில்,குறிப்பாக ஹலாலான வழியில் செலவு செய்கிறாளா என்று கவனிக்க வேண்டும்.

2) வரவுக்கு தகுந்தவாறு எவ்வாறு செலவு செய்வது என்று கற்றுக் கொடுக்க வேண்டும்.

3) நாம் எவ்வாறெல்லாம் சிரமப்பட்டு இந்த பணத்தை சம்பாதித்தோம் என்று எடுத்துக் கூறி,பணத்தின் அருமையை புரிய வைக்கவேண்டும்.

4) முடித்த வரையில் மனைவிகளுக்கும்,பிள்ளைகளுக்கும் மார்க்க கல்வியை கற்பதற்கு எல்லா வழிகளையும் செய்யவேண்டும்.

5) தக்க காரணம் இல்லாமல் வெளிவூருக்கு செல்வோர் அனாவசியமாக வாடகைக்கு கார் அமர்த்தி போகும் பழக்கத்தை கைவிட முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

6) இன்னும் சில பெண்மணிகள் தெருக்களில் விற்கப்படும் பொருட்களை தமக்கு தேவை இல்லை என்று தெரிந்தும் அவர்களிடம் தேவையில்லாமல் தலையிட்டு சண்டைகள் ஏற்படுகின்றன், இதனை தவிர்க்கவும் முயற்சி எடுக்க வேண்டும்.

7) தற்போது கைபேசி(cell phone) இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது.எனவே வீட்டிற்கு ஒரு கைபேசி போதுமே….வீண் செலவு வேண்டாமே…இந்த விசயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

8) வீட்டில் உள்ளவர்களை நாம் ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக நாம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

9) மேலும், குறிப்பாக நமது பெண்கள்(மனைவிமார்கள்) வீட்டில் இருக்கும் நேரத்தை விட பக்கத்து வீட்டு திண்ணையில் பகல் இரவு நேரம் பாராது உட்கார்ந்து புறம் பேசுவதுதான் இன்று அதிகமாக நடந்து கொண்டிருக்கிற மிகவும் மோசமான பழக்கமாகும்.இதன் மூலமாகத்தான் இன்று பல்வேறு சீர்கேடுகள் நடந்த வண்ணம் உள்ளன.எனவே இதனை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்யவேண்டும்.

10)நமது வீட்டு திண்ணைக்கு நமது பெண்கள் போகாமல் பார்த்துக்கொண்டாலே இதனை எளிதாக ஒழித்து விடலாம்.

ஆகவே வெளி நாட்டில் இருந்து முடித்து வரும் கடையநல்லூர் வாசிகளே! வெளி நாட்டில்தான் பிழைக்க முடியும்.நமதூரில் பிழைக்க வாய்ப்பில்லை என்று  நாம் கவலைப்பட வேண்டாம். அல்லாஹ் நமக்கு ஹலாலான முறையில் சம்பாதிப்பதற்கு ஏராளமான வசதிகளையும் வாய்ப்புகளையும் நமதூரிலேயே வைத்துள்ளான்.அதனை நாம் தான் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை.

“வெளிநாட்டில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் நீங்கள் (அடிமைகள்) தொழிலாளிகள் தான்!

நமதூரில் நீங்கள் சொந்த தொழில் செய்து குறைவாக சம்பாதித்தாலும் நீங்கள் முதலாளிகளே!” 

“நாம் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்.எல்லாம் வல்ல அந்த அல்லாஹ் நம் வாழ்கையில் வறுமை எனும் இருளைப் போக்கி, பரகத் (என்னும் ஒளியை வீச)       செய்வானாக.ஆமீன்!”

Add Comment