ஸ்பெக்ட்ரம் முறைகேடு… சிபிஐ விசாரணையை கண்காணிப்போம்!-உச்ச நீதிமன்றம் அதிரடி!

நாட்டையே உலுக்கியுள்ள ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான சிபிஐயின் விசாரணையைக் கண்காணிப்போம் என அதிரடியாக அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இது யாரும் எதிர்பாராத திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த தலைமுறைக்கான தொலைத் தொடர்பு அலைக்கற்றை எனப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி பெரும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவருக்கு முதல் ஒதுக்கீடு என்ற வகையில், 119 நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பை விட மிக மிகக் குறைந்த விலைக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கியதால், அரசுக்கு ரூ. 1.76 கோடி நஷ்டம் ஏற்பட, துறையின் அமைச்சராக இருந்த ராஜா காரணமாக இருந்துள்ளார் என தலைமைக் கணக்கு அதிகாரி அறிக்கை தர நாடே அதிர்ந்தது.

இந்த விவகாரத்தை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுநல அமைப்பு Doxycycline No Prescription வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த விசாரணையில் அசாதாரண மந்தம் நிலவியதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து, விசாரணையைத் துரிதப்படுத்த உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாகவும், எதிர்க்கட்சிகளின் உறுதியான போராட்டம் காரணமாகவும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா பதவி விலகியது தெரிந்ததே. தற்போது ராசா, அவரது உறவினர்கள், அதிகாரத் தரகராக செயல்பட்ட நீரா ராடியா, கனிமொழியின் நெருங்கிய நண்பர் ஜெகத் கஸ்பர், ராசாவின் நண்பர் நக்கீரன் காமராஜ் என பலரது வீடுகள், அலுவலகங்களை சிபிஐ சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளது.

பிப்ரவரி 10-ம் தேதிக்குள்…

விசாரணையின் போக்கு திசைமாறிவிடக் கூடாது என்ற நோக்கிலும், குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்ற நோக்கிலும், சிபிஐயின் இந்த விசாரணையை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுவரை நடந்த விசாரணைகள், அதில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை சீலிட்ட கவரில் வைத்து பிப்ரவரி 10-ம் தேதிகத்குள் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலிருந்து இந்தத் துறையில் நடந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத் திருப்பமாக உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

Add Comment