சிங்கப்பூர் ரியாலிட்டி ஷோவில் வெயிட்டை குறைத்து பரிசு பெற்ற இந்திய வம்சாவளி வாலிபர்

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ‘தி பிக்கஸ்ட் லூசர் ஏசியா 2’ ஆகத் தேர்வாகி ரூ. 44 லட்சத்து 88 ஆயிரத்து 720 வென்றுள்ளார். இது ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஆகும்.

விவேகானந்தம் தேவராஜ் (24) என்ற அந்த வாலிபர், இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஆறு மாதத்தில் 67 கிலோ எடையை buy Viagra online குறைத்துள்ளார். அவர் இதற்கு முன் 144 கிலோவாக இருந்தார். இந்த ஷோவில் கலந்து கொண்டவர்களிலேயே தேவராஜ் தான் அதிகபட்சமாக 46. 53 சதவிகிதம் எடையையைக் குறைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்த ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எதுவும் மனது வைத்தால் சாத்தியம் என்பதை தெரிந்து கொண்டேன். எடையைக் குறைக்க விரும்புபவர்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து சிங்கப்பூரில் பருமந்தனம் அதிகரிப்பதைத் குறைக்க விரும்புகிறேன்.

சிங்கப்பூரில் பருமந்தனம் அதிகம் உள்ளது. குறிப்பாக இளம் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் இருப்பதால் அவர்கள் மத்தியில் தான் இது வேகமாக பரவி வருகிறது. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றார்.

Add Comment