மீண்டும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட வர மாட்டேன்-வார்னே அறிவிப்பு

வரலாறு காணாத அளவுக்கு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. எனவே அணியைக் கரையேற்ற மீண்டும் ஷான் வார்னே பந்து வீச்சாளாராக இணைய வேண்டும் என்று கோரிக்கைள் வலுத்துள்ளன. ஆனால் மீண்டும் வரும் திட்டமில்லை என்று வார்னே கூறி விட்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பெரும்சிக்கலில் உள்ளது. இங்கிலாந்திடம் ஆஷஸ் தொடரில் மோசமான தோல்வியைத் தழுவி ஆஸ்திரேலியர்களிடம் கடுமையாக வாங்கிக் கட்டி வருகிறது.

எல்லாவற்றுக்கும் வார்னேதான் காரணம் என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் கருத்து. வார்னே ஓய்வு பெற்றுச் சென்றது முதல் ஆஸ்திரேலியா பலமிழந்து போய் விட்டதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் கருதுகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் பல முன்னணி வீரர்களும் கூட வார்னே இல்லாதது பெரும் பலவீனமாகியுள்ளதாக ஒப்புக் கொள்கின்றனர்.

இதனால் மீண்டும் வார்னே ஆட வர வேண்டும். ஆஸ்திரேலியாவை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பதில் தராமல் இருந்து வந்தார் வார்னே.

இந்த நிலையில் அவர் தலையில் பெரும் குண்டு வந்து விழுந்தது. நடிகை எலிசபெத் ஹர்லியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. இதையடுத்து தனது மனைவியை விட்டுப் பிரிந்து விட்டதாக அறிவிக்க நேரிட்டது வார்னே. அதேபோல ஹர்லியும், தான் காதலித்து வந்த இந்தியரான அருண் நய்யாரை விட்டுப் பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

இத்தோடு நிற்கவில்லை சர்ச்சை, வார்னே தனது கிரிக்கெட் வாழ்க்கையின்போது கிட்டத்தட்ட 1000 பெண்களுடன் உறவு வைத்திருந்தார் என்று ஒருதகவல் வெளியாகி வார்னே பெயரை நாறடித்து விட்டது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், தான் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்காக ஆட வரப் போவதில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆஷஸ் தொடரில் நான் பங்கேற்கப் போவதில்லை.

நான் மீண்டும் வர வேண்டும் என்ற கோரிக்கை என்னை நெகிழ வைத்துள்ளது. ஆனால் மீண்டும் நான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது என்பது இயலாத காரியம்.

உங்கள் அனைவரையும் எனது பதில் நிச்சயம் ஏமாற்றத்தில் ஆழ்த்தும். ஆனால், உண்மை அதுதான். நிச்சயம் என்னால் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு, குறிப்பாக நடப்பு ஆஷஸ்
தொடருக்கு வர முடியாது.

ஒரு வேளை நான் வந்தாலும் கூட போட்டிக்குத் தகுதி படைத்தவனாக நான் இருக்க வேண்டும். பொதுவாக எனது உடல் நலம் நன்றாகவே உள்ளது. ஆனால் buy Doxycycline online நீண்ட நேரம் என்னால் பந்து வீச முடியாது என்றே கருதுகிறேன். மேலும் ஒரு பந்து வீச்சாளருக்கு மிகுந்த நேர்த்தி இருப்பது அவசியம், கடினமான பயிற்சிகள் தேவை. இதெல்லாம் எனக்கு சாத்தியமா என்று தெரியவில்லை.

அந்த மனோபலத்தை நான் தாண்டி விட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எல்லா வகையிலும் ஆலோசனை சொல்ல நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். ஆஷஸ் தொடரை கைப்பற்ற அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல தயாராகவே இருக்கிறேன்.

நடப்பு ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் டிரா செய்து, 2வது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா. பெர்த் போட்டியை எப்படியாவது வென்று விட்டால் போட்டிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும். முதலில் அதை ஆஸ்திரேலியா செய்ய வேண்டும். நிச்சயம் ஆஸ்திரேலியாவால் பெர்த்தில் வெல்ல முடியும்.

இங்கிலாந்து தனது பலத்தின் மீதே சந்தேகப்படும் படியாக ஆஸ்திரேலியா செய்ய வேண்டும். அவர்களைக் குழப்பினால்தான் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல மீன் கிடைக்கும். ஆஸ்திரேலியாவைப் பற்றி அவர்கள் கவலைப்படும்படியாக ஆஸ்திரேலியா நடந்து கொள்ள வேண்டும். அதில்தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியுள்ளது. ஒரு வெற்றி கிடைத்தால் போதும் எல்லாம் மாறி விடும். அதேசமயம், பெர்த்தில் ஆஸ்திரேலியா தோற்றாலும் அணியின் நிலைமை பெரும் மாற்றத்தைக் காணும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் வார்னே.

Add Comment