வெளிநாடு வாழ் தமிழர் வாரியம் – தமிழ்ப் பணியாளர்கள் நன்றி

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சவுதி அரேபியாவில் உள்ள தன்ஸ்வா அமைப்பு மற்றும் தமிழ்ப் பணியாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12ம் தேதியன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கழக விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இத்தகவலை வெளியிட்டார்.

2007ம் ஆண்டு ஜூன் மாதம் 08ம் தேதியன்று சென்னை வந்த தன்ஸ்வா அமைப்பின் தலைவர் அப்துல் சத்தார் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி வாரியம் அமைப்பதற்கான கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தார்.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தமிழ் சொம்மொழி மாநாட்டுக்கு சவுதி அரேபியா சார்பில் வருகை தந்த அப்துல் சத்தார், தமிழக முதல்வரிடம் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கையை ஏற்று வாரியம் அமைக்க உத்தரவு வெளியானது Buy cheap Cialis சவுதி அரேபியா வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது சவுதி அரேபியாவிற்கான இந்தியத் தூதரகத்துடன் இணைந்து மறைமுகமாக தமிழகர்களுக்கு உதவிகள் பல செய்து வரும் தன்ஸ்வா அமைப்பு, இந்தப் புதிய வாரியத்தின் மூலம் இனி தமிழர்கள் நல திட்டங்கள் பலவற்றை பெறுவர் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

Add Comment