உத்தரகாண்டில் வெள்ளப்பெருக்கு:10 பேர் மரணம், 38 பேரை காணவில்லை!

டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் பத்துபேர் மரணித்துள்ளனர். 38 பேரை காணவில்லை. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் வழியில் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள கர்ணபிரயாக் பகுதியில் சனிக்கிழமை கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இதே மாவட்டத்தில் உள்ள போக்ரி பகுதியில் ஒரு குழந்தை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தது.

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலைகள் தடைப்பட்டுள்ளன. பத்ரிநாத் யாத்திரை மேற்கொண்டுள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்ல இயலாமல், பாதாளகங்கை, லம்பாகர், பிராகி ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர்.

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கங்கோத்ரி பகுதியில் பாகீரதி நதி அபாய அளவைத் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி தீயணைப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த இடத்திலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

30 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. துண்டா பகுதியில் 4 பேர் இறந்தனர். மழை-வெள்ளம் காரணமாக கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரிக்கு மேற்கொள்ளப்படும் சார்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேதார்நாத் யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலைமையைக் கண்காணித்து வரும் உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, உத்தரகாசி மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அங்குள்ள அசி கங்கா நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் 19 தொழிலாளர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. கங்கோத்ரி, துண்டா, உத்தரகாசி, பர்கோட் ஆகிய பகுதிகளில் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான இமாசலப் பிரதேசத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குலு மாவட்டத்தின் மணாலி பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து மணாலி துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள துண்டியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, அங்கு கட்டப்பட்டு வந்த பாலம் சேதமடைந்தது. இதேபோல், பால்சன் பகுதியில் உள்ள தாற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. குலு-மணாலி சாலையில் buy Levitra online வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது. அவர் ஓட்டிச் சென்ற வாகனம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, ஜம்முவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு பகுதியில் பல்வேறு நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜம்மு மாவட்டத்தில் 7 பேரும் கதுவா மாவட்டத்தில் 15 பேரும் சனிக்கிழமை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர் 3 மணிநேரம் போராடி, அவர்களை மீட்டனர். ஜீனாப், தாவி, உஜ் ஆகிய நதிகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ள நீர் ஓடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நதிகளின் கரையோரங்களில் இருந்து விலகி இருக்கும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Add Comment