கோடிக்கணக்கான பணத்தை சூடான் அதிபர் ஊழல் புரிந்ததாக விக்கிலீக்ஸ்

சூடான் அதிபர் உமர் அல் பஷீர் அரசின் கோடிக்கணக்கான டாலர் பணத்தை ஊழல் புரிந்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடுச் செய்துள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

900 கோடி டாலர் Buy Doxycycline Online No Prescription பணத்தை அவர் லண்டன் வங்கியில் முதலீடுச் செய்துள்ளார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றதரப்பு தலைமை வழக்கறிஞரை மேற்கொள்காட்டி அமெரிக்க தூதரக பிரதிநிதி வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவலில் இச்செய்தி அடங்கியுள்ளது.

விக்கிலீக்ஸின் தகவலை கார்டியன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட லாயிட்ஸ் குரூப் வங்கியில்தான் பஷீரின் ஊழல் பணத்தின் ஒரு பகுதி முதலீடுச் செய்யப்பட்டுள்ளது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தரப்பு தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ ஒகாம்போ தெரிவிக்கிறார்.

ஊழல் வெளியே வந்தால் மக்களிடையே பஷீருக்கு இருக்கும் இமேஜ் மாறி கொள்ளைக்காரர் என்ற பட்டம் கிடைக்கும் என ஒகாம்போ கூறுகிறார். ஆனால், இக்குற்றச்சாட்டை லாயிட்ஸ் வங்கி மறுத்துள்ளது. பஷீரின் பெயரில் அத்தகையதொரு பணம் முதலீடுச் செய்யப்படவில்லை என அவ்வங்கி தெரிவிக்கிறது.

ஒகாம்போவின் கூற்று உண்மையானால் பஷீர் கொள்ளையடித்த பணம் சூடானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்தில் ஒரு பகுதியாகும். 2009 ஆம் ஆண்டு பஷீருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்றவாளி எனக்கூறி கைதுவாரண்ட் பிறப்பித்த பிறகு இதனைக் குறித்து விவாதிக்கிறார் ஒகாம்போ.

அதேவேளையில், சூடான் அரசின் செய்தித் தொடர்பாளர் இக்குற்றச்சாட்டை மறுக்கிறார். சூடான் அரசை அவமதிப்பிற்குள்ளாக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அரசியல் அஜண்டாவின் மற்றொரு ஆதாரம் இது என அவர் குற்றஞ்சாட்டினார்.

அதிபர் ட்ரஸரியில் பணத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும், தனது வங்கிக் கணக்கில் அதனை மாற்றுவதற்கு இயலும் எனக்கூறுவதும் பெரியதொரு நகைச்சுவையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Add Comment