ரகசியம் வெளியானது:அமெரிக்கா பாகிஸ்தானின் சி.ஐ.ஏ தலைவரை திரும்ப அழைத்தது

பழங்குடியினர் பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்கிடையே ரகசியம் வெளிப்பட்டதால் பாகிஸ்தானின் சி.ஐ.ஏ தலைமை அதிகாரியை அமெரிக்கா திரும்ப அழைத்துள்ளது.

ஜொனாதான் ஃபாக்ஸ் என்றழைக்கப்படும் அந்த சி.ஐ.ஏ அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.

2009 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தனது Buy cheap Bactrim சகோதரன் மற்றும் மகனின் கொலைக்கு காரணம் ஃபாக்ஸ்தான் என ஒரு பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் எழுப்பிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ரகசியமாக செயல்பட்டுவந்த சி.ஐ.ஏ அதிகாரியின் உண்மை முகம் வெளியானது.

வடக்கு வஸீரிஸ்தானில் கரீம்கான் என்ற பத்திரிகையாளர்தான் ஃபாக்ஸிற்கு எதிராக பகிரங்கமாக குற்றச்சாட்டை எழுப்பினார். பாதுகாப்பு காரணங்களைக் கூறி அமெரிக்கா ஃபாக்ஸை திரும்ப அழைத்துள்ளது. ஃபாக்ஸிசின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா காரணம் கூறுகிறது.

அதேவேளையில், சட்டரீதியான நடவடிக்கைக்கு பயந்துதான் ஃபாக்ஸ் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளார் என கரீம் கானின் வழக்கறிஞர் தெரிவிக்கிறார். ஃபாக்ஸை நீதிமன்றம் அழைக்கவிருக்கிறது என கரீம்கானின் வழக்கறிஞரான ஷஹ்ஷாத் அக்பர் தெரிவிக்கிறார். ஃபாக்ஸ் வர்த்தக விசாவில் பாகிஸ்தானுக்கு வந்ததால் அவருக்கு தூதரக ரீதியிலான உதவிகள் கிடைக்காது என பாகிஸ்தான் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சூழலில்தான் ஃபாக்ஸ் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளார்.

வாஷிங்டனை பொறுத்தவரை சிக்கலான சூழலில்தான் ஃபாக்ஸை திரும்ப அழைத்துள்ளது. ஆப்கானை குறித்த புதிய மீளாய்வு அறிக்கையில் பாகிஸ்தான் பழங்குடியின பகுதியில் தாலிபான் மையங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஆளில்லா விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது அமெரிக்கா. இத்தாக்குதலுக்கு அமெரிக்காவிற்கு இக்குற்றச்சாட்டின் மூலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகத்தை மையமாகக் கொண்டு சி.ஐ.ஏ ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்திவருகிறது. நேற்று முன் தினம் நடந்த ஆளில்லா விமானத்தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

50 கோடி டாலர் நஷ்ட ஈடுக்கோரி கரீம்கான் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். எந்தவொரு நாட்டிலும் சி.ஐ.ஏ தலைவரைக் குறித்த தகவல்கள் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும். ஒரு பாகிஸ்தானி பத்திரிகையாளரிடமிருந்து ஃபாக்ஸைக் குறித்த தகவல் கிடைத்ததாக கரீம்கானின் வழக்கறிஞர் கூறுகிறார்.

மூத்த சி.ஐ.ஏ அதிகாரியை அமெரிக்கா திரும்ப அழைப்பது அபூர்வமான ஒன்றாகும். இதற்கு முன்னர் உள்ளூர் பத்திரிகைகளில் பெயர் வெளியானதைத் தொடர்ந்து 1999 இல் இஸ்ரேல் மற்றும் 2001 இல் அர்ஜெண்டினா சி.ஐ.ஏ தலைவர்களை அமெரிக்கா திரும்ப அழைத்திருந்தது.

Add Comment