சென்னை உயர் நீதிமன்றம் 150 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது!

சென்னை உயர்நீதிமன்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் திகதி, தனது 150 வது ஆண்டுவிழாவை கொண்டாடவுள்ளது.

இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவில், பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொள்வதாகத் தெரிகிறது.

இது பற்றிப் பேசிய மூத்த வழக்கறிஞர் காந்தி, “ஆங்கிலேயர் காலத்தில் கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே உயர்நீதி மன்றங்கள் இருந்தன. நமக்கு முன்பெல்லாம் வழக்கு என்றால் அங்குதான் போகவேண்டும். அதன் பின்னர் சென்னை உயர்நீதி மன்றம் மெரீனா கடற்கரை எதிரில் உள்ள கட்டிடத்தில் இயங்கிவந்தது. விக்டோரியா மகாராணி இந்த சென்னை உயர் நீதிமன்றம் இங்கு கட்டுவதற்கு ஆணையிட்ட பின்னர், 1862 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. அப்போதே 13 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் இது.

இந்த உயர் நீதிமன்றத்தில் முதலில் ஆங்கிலேயர்கள்தான் வழக்கறிஞர்கள், நீதிபதிகளாக வேலை பார்த்தார்கள். அதன் பின்னர் படிப்படியாக இந்தியர்கள் வழக்கறிஞருக்குப் படித்து வேலை பார்க்க ஆரம்பித்தார்கள். நான் 50 வருடங்களாக சர்விஸ் செய்து கொண்டிருக்கிறேன். அப்போது லஞ்சம் வாங்குவது என்பது அவ்வளவு பெரிய குற்றம். Doxycycline online ஒரு முறை, மாஜிஸ்ட்ரேட் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரிந்து உயர்நீதி மன்றமே ஆடிப்போய் விட்டது” என்கிறார் மூத்த வழக்கறிஞர் காந்தி, சென்னை உயர்நீதி மன்றம் தனது 150 ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Add Comment