லண்டன் ஒலிம்பிக் : விளையாடிய 5 போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி அதிர்ச்சி தோல்வி!

ஒலிம்பிக் ஆடவருக்கான ஹாக்கி போட்டிகளில் பெல்ஜியம் நாட்டிடமும் இந்தியா தோல்வி அடைந்ததால், இம்முறை ஒலிம்பிக்கில் இந்தியா no prescription online pharmacy மிக மோசமான பெயரை எடுத்துள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் லீக் ஆட்டங்களில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்து வருவது இதுவே முதன்முறையாகும்.

முன்னதாக ஆலந்திடம் 2-3, நியூசிலாந்திடம் 1-3, ஜேர்மனியிடம் 2-5 என்ற கணக்கில் தோல்வியை தழுவி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கோட்டைவிட்டிருந்தது இந்திய அணி. பின்னர் நடைபெற்ற போட்டியில் கொரியாவிடம் ஆறுதல் வெற்றியாவது அடையுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்று பெஜியத்துடன் 3-0 என தோல்வி அடைந்தது. இதையடுத்து இதுவரை விளையாடியிருந்த 5 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்து வைட்வாஷ் ஆகியுள்ளது.

மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்ளும் ஹாக்கி போட்டியில் இந்தியா அடுத்து தெ.ஆபிரிக்காவை சந்திக்கிறது. இப்போட்டியே இந்தியா 11வது அல்லது 12 வது இடத்தை பிடிப்பதை தீர்மானிக்கவுள்ளது. குழு ஒருங்கிணைப்பு இல்லை. தடுப்பாட்டம் இல்லை. 30%, 40% வீத திறனையே எமது வீரர்கள் வெளிப்படுத்தினர் என இந்திய அணியின் கேப்டன் பாரதி செட்ரி தெரிவித்துள்ளார்.

Add Comment