இணையத் தேடலின் வளர்ச்சி – Google தேடலில் Gmail தகவல்கள்… !

வேகமான, மேம்படுத்தப்பட்ட, விரிவான தேடல் முடிவுகளை வழங்கவும், கூகுள் தேடல் மற்றும் ஜிமெயிலினை ஒன்றாக இணைக்கும் நோக்குடனும் புதிய வசதியொன்றினை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அவ்வசதி என்னவெனில் குறித்த விடயமொன்றினை நாம் கூகுளில் தேடும் போது அவ்விடயம் தொடர்பான தகவல் நமது ஜி மெயிலில் இருக்குமானால் அத்தகவலும் தேடல் முடிவுகளோடு காட்டப்படுதலாகும்.மின்னஞ்சல் மற்றும் தேடல் பொறி வரலாற்றில் இது ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகின்றது.

இதன்போது கூகுள் தேடல் பக்கத்தின் வலது பக்கத்தில் (மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு) முடிவுகள் காண்பிக்கப்படும்.

buy Ampicillin online justify;”>உதாரணமாக:

Barry Schwartz எனத் தேடுவோமானால் அவர் தொடர்பான தேடல் முடிவுகளோடு, உங்கள் ஜி மெயிலில் அவர் தொடர்பான தகவல்கள் காணப்படுமானால் அதாவது அவரிடமிருந்தான மின்னஞ்சல்கள், உரையாடல்கள் ஆகியனவும் கீழே காட்டப்பட்டுள்ளவாறு முடிவுகளோடு காண்பிக்கப்படும்.

எனினும் கூகுள் இதனூடாக நபரொருவரின் தனிப்பட்ட விடயங்களை வெளியே அம்பலப்படுத்த முயல்கின்றதா? எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனை மறுக்கும் கூகுள், வழங்கும் பதில் என்னவெனில், ஒருவர் அவரது ஜி மெயில் கணக்கில் நுழைந்துள்ள நிலையில் மட்டுமே அவரின் தேடல் முடிவுகளோடு, அத் தேடலுடன் தொடர்புபட்ட மின்னஞ்சல்களும் உள்ளடக்கப்படும் என்பதாகும்.

மேலும் இவ்வசதி உத்தியோகபூர்வமாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இதனைத் தற்போது அனைவரும் உபயோகப்படுத்த முடியாது.

இவ்வசதியானது http://g.co/searchtrial என்ற தளத்தில் முதலில் பதிவு செய்யும் 1 மில்லியன் பாவனையாளர்களுக்கு மட்டுமே உடனடியாக இதனைப் பாவிக்கமுடியும் என கூகுள் அறிவித்திருந்தது.

தற்போது அவ் எண்ணிக்கை கடந்து விட்டது. எனினும் மற்றையவர்கள் அத்தளத்தில் காணப்படும் Join the filed trial என்ற நீல நிற பட்டனை அழுத்துவதன் மூலம் அவ்வசதியை உபயோகிப்பதற்காக கூகுளுக்கு வேண்டுகோள் ஒன்றினை அனுப்பமுடியும்.

அதன்பின் கூகுளிடம் இருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு அழைப்பு வந்ததும் அவ்வசதியை நீங்களும் உபயோகிக்கமுடியும்.

இதேவேளை இவ்வசதியை ஜீ மெயிலுக்கு மட்டும் மட்டுப்படுத்த விரும்பவில்லையென கூகுள் தெரிவிக்கின்றது.

எதிர்காலத்தில் யாஹூ போன்ற மின்னஞ்சல் சேவைகளுக்கும் விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கின்றது.

முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயங்கள் என்னவெனில் யாரும் இவ்வசதியை உபயோகிப்பதற்கு தன்னிச்சையாக உள்வாங்கப்படவில்லையென்பதுடன் ஜீ மெயில் கணக்கு வைத்துள்ளவர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும். கூகுள் ‘அப்ளிகேசன்’ ( App Acoount) வைத்துள்ளவர்கள் உபயோகிக்க முடியாது என்பதாகும்.

Add Comment