சோயப் எளிமை: சானியா பெருமிதம்

சோயப் மாலிக்கின் எளிமை தான் தன்னை பெரிதும் கவர்ந்ததாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளை கடந்து இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் முடிந்து தற்போது 9 மாதங்கள் முடிந்து விட்டது.
சானியா சாம்பியன்:
துபாயில் அல் ஹப்தூர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில் சானியா, செர்பியாவின் பஜானா ஜோவனாஸ்கியை 4-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். இம்மகிழ்ச்சியில் “தி நியூஸ் பத்திரிகைக்கு சானியா அளித்த பேட்டி:
இந்த ஆண்டை வெற்றியுடன் முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனது சொந்த வாழ்க்கையில் நான் விரும்பிய இளவரசர் கிடைத்து விட்டார். நான் ஒரு மகத்தான மனிதர் மட்டும் அல்லாமல் சிறந்த கிரிக்கெட் வீரரை திருமணம் முடித்துள்ளேன். Buy Cialis இதன் மூலம் இரு நாடுகள் உறவு அதிகரித்துள்ளது. இதனை இரண்டு நாகரிகங்களை இணைத்த திருமணம் என குறிப்பிடலாம்.
சோயப் மாலிக்கின் எளிமை தான் என்னை பெரிதும் கவர்ந்தது. திருமணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அதே மனிதராக தான் இப்போதும் இருக்கிறார். எங்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருவரும் தொழில்ரீதியான விளையாட்டு நட்சத்திரங்கள் என்பதால், இருவரும் தேவைகளை நன்கு அறிந்துள்ளோம். கடவுள் கருணையால் மிகச் சிறந்த ஜோடியாக திகழ்கிறறோம்.
இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன். டென்னிசில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. லண்டன் ஒலிம்பிக்கில் நாட்டுக்காக தங்கம் வென்று தர விரும்புகிறேன்.
.
பாகிஸ்தான் அணிக்காக சோயப் விளையாட வேண்டும். இதற்காக அவரது ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும்.
இவ்வாறு சானியா கூறினார்.

Add Comment