ஆஸி., அசத்தல் வெற்றி: இங்கிலாந்து ஏமாற்றம்

பெர்த் டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 267 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஷஸ் தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு மிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி பெர்த்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 268, இங்கிலாந்து 187 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் எடுத்தது.
பின் 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
ஹாரிஸ் அபாரம்:
நேற்று 4ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி, ரேயான் ஹாரிஸ் வேகத்தில் சிதறியது. இவரது துல்லிய பந்துவீச்சில் ஆண்டர்சன் (3), இயான் பெல் (16), பிரையர் (10), ஸ்டீவன் பின் (2) உள்ளிட்டோர் அவுட்டானார்கள். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 123 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா சார்பில் ரேயான் ஹாரிஸ் 6, மிட்செல் ஜான்சன் 3, ஹில்பென்ஹாஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பாண்டிங் காயம்
ஆஸ்திர÷லிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் இடது கை சுண்டு விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் டிராட் அடித்த பந்தை பிடிக்க முயன்ற இவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை குறித்து “எக்ஸ்-ரே’ எடுத்துப்பார்த்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. Buy cheap Doxycycline இதனால் இவர், நேற்றைய 4ம் நாள் ஆட்டத்தின் போது “பீல்டிங்’ செய்ய வரவில்லை.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “”பெர்த் டெஸ்டில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஜான்சன், ரேயான் ஹாரிஸ் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு முக்கிய காரணம். எனது இடது கை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் குணமடைந்துவிடும். இதனால் மெல்போர்ன் டெஸ்டில் நிச்சயம் பங்கேற்பேன்,” என்றார்.

Add Comment