சச்சின் 50வது சதம்!: டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை

செஞ்சுரியன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 50 வது சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். கேப்டன் தோனியும் துணிச்சலாக போராடினார். ஆனாலும், தென் ஆப்ரிக்க அணியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. இன்று மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால் மட்டுமே சிக்கலில் இருந்து தப்ப முடியும்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 136 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 620 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து இருந்தது. டிராவிட் (28), இஷாந்த் சர்மா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
டிராவிட் ஏமாற்றம்:
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. “நைட் வாட்ச்மேன்’ இஷாந்த் சற்று தாக்குப்பிடித்து, 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிராவிட் (43) மேலும் 15 ரன்கள் எடுத்தபோது, மார்கல் வேகத்தில் சிக்கினார்.
“மிடில் ஆர்டர்’ சரிவு:
இரண்டாவது இன்னிங்சில் இக்கட்டான நிலைகளில் எல்லாம் அணிக்கு கைகொடுத்து மீட்கும் லட்சுமண், நேற்று கைவிட்டார். இவர் 8 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ரெய்னா (5), வழக்கம் போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பெவிலியன் திரும்பினார்.
சபாஷ் தோனி:
பின் சச்சினுடன், கேப்டன் தோனி இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்ரிக்க வீரர்களின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ரன்களை குவித்தது. சச்சினுக்கு நல்ல “கம்பெனி’ கொடுத்த தோனி, அதிரடியாக விளாசினார். டிசோட்சபே மற்றும் மார்கல் ஓவரில் தலா இரண்டு பவுண்டரி அடித்த தோனி, காலிஸ் ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய தோனி, டெஸ்ட் அரங்கில் 20 வது அரைசதம் அடித்தார்.
சச்சின் வரலாறு:
மறுமுனையில், டிசோட்சபேயின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார் சச்சின். அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்த ஹாரிசின் ஓவரில் “சூப்பர்’ சிக்சர் அடித்து அசத்திய சச்சின், ஸ்டைன் பந்தை “ஆப்சைடில்’ Buy Doxycycline தட்டி விட்டு, ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்தார். சச்சின், தோனியை பிரிக்க, ஸ்மித் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
ஏழாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 172 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், தோனி, 90 ரன்களில் (14 பவுண்டரி) அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்தியா போராட்டம்:
பின் வந்த ஹர்பஜன் (1) ஏமாற்றினார். போதிய வெளிச்சமின்மை காரணமாக, நான்காம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்ட போது, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 454 ரன்கள் எடுத்து இருந்தது. சச்சின் 107, ஸ்ரீசாந்த் 3 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஸ்டைன் 3, ஹாரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், 30 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
தொடரும் சாதனை பயணம்…
கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில் 50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.
கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்:
* டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
* இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
* ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் (50) அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினை சேரும்.
50 சதம் வந்த பாதை
சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:
சதம் அணி இடம் ஆண்டு
1. முதல் சதம் இங்கிலாந்து மான்செஸ்டர் 1990
2. 5வது சதம் இங்கிலாந்து சென்னை 1993
3. 10வது சதம் இங்கிலாந்து நாட்டிங்காம் 1996
4. 15வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 1998
5. 20வது சதம் நியூசிலாந்து மொகாலி 1999
6. 25வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 2001
7. 30வது சதம் இங்கிலாந்து லீட்ஸ் 2002
8. 35வது சதம் இலங்கை டில்லி 2005
9. 40வது சதம் ஆஸ்திரேலியா நாக்பூர் 2008
10. 45வது சதம் வங்கதேசம் மிர்பூர் 2010
11. 50வது சதம் தென் ஆப்ரிக்கா செஞ்சுரியன் 2010
ஆஸி.,க்கு எதிராக அதிகம்

தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11
சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7
சதங்கள் அடித்துள்ளார். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சச்சின் எடுத்த
சதங்களின் விபரம்:

அணி சதங்கள்

1. ஆஸ்திரேலியா 11

2. இலங்கை 9

3. இங்கிலாந்து 7

4. தென் ஆப்ரிக்கா 6

5. வங்கதேசம் 5

6. நியூசிலாந்து 4

7. வெஸ்ட் இண்டீஸ் 3

8. ஜிம்பாப்வே 3

9. பாகிஸ்தான் 2
டிராவிட் 12,000 ரன்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட்(37) நேற்று 43 ரன்கள் எடுத்த போது, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்களை எட்டினார். 148 போட்டிகளில் பங்கேற்று, டிராவிட் இம்மைல்கல்லை எட்டினார். இதையடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் லாராவை (11,953) முந்தி, மூன்றாவது இடம் பெற்றார். முதல் இரு இடங்களில் இந்தியாவின் சச்சின் (14,431), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (12,333) உள்ளனர்.
தோனிக்கு பெருமை
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி-தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 136
தென் ஆப்ரிக்கா 620/4, டிக்ளேர்
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா
காம்பிர்-எல்.பி.டபிள்யு., (ப)ஸ்டைன் 80(124)
சேவக்(கே)ஸ்மித்(ப)ஹாரிஸ் 63(79)
டிராவிட்(கே)பவுச்சர்(ப)மார்கல் 43(109)
இஷாந்த்(கே)ஆம்லா(ப)ஸ்டைன் 23(51)
சச்சின்-அவுட் இல்லை- 107(226)
லட்சுமண்(கே)டிவிலியர்ஸ்(ப)டிசோட்சபே 8(21)
ரெய்னா(கே)ஹாரிஸ்(ப)காலிஸ் 5(13)
தோனி(கே)பவுச்சர்(ப)ஸ்டைன் 90(106)
ஹர்பஜன்(கே)காலிஸ்(ப)ஹாரிஸ் 1(2)
ஸ்ரீசாந்த்-அவுட் இல்லை 3(8)
உதிரிகள் 31
மொத்தம் (122.2 ஓவரில் 8 விக்.,) 454
விக்கெட் வீழ்ச்சி: 1-137(சேவக்), 2-170 (காம்பிர்), 3-214(இஷாந்த்), 4-242(டிராவிட்), 5-256(லட்சுமண்), 6-277(ரெய்னா), 7-449(தோனி), 8-450(ஸ்ரீசாந்த்).
பந்து வீச்சு: ஸ்டைன் 27.2-5-103-3, மார்கல் 28-5-91-1, டிசோட்சபே 24-3-98-1, ஹாரிஸ் 30-5-88-2, காலிஸ் 13-3-56-1.

Add Comment