மும்பை போராட்டத்தில் கலவரம் : 2 பேர் பலி! பலர் கவலைக்கிடம்!

அஸ்ஸாம் கலவரத்தைக் கண்டித்து மும்பையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளால் வன்முறை வெடித்தது. இதில் 2 முஸ்லிம்கள்  உயிரிழந்தனர்.

அஸ்ஸாம் கலவரத்தை  கண்டித்து “ரசா அகாடமி” என்ற அமைப்பின் சார்பில் மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் சனிக்கிழமை மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Buy Lasix Online No Prescription 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிலையில், மதியம் 2 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில், ஆஸாத் மைதானத்தின் உள்புறம் நடந்துக்கொண்டிருந்தது. அப்போது, மைதானத்துக்கு வெளியே, “முகத்தில் துணியை கட்டிக்கொண்டு” ஆர்ப்பாட்டத்துக்கு சம்மந்தமில்லாத சிலர்  திடீரென ஊடக நிறுவனங்கள் மற்றும் காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களுக்கு தீவைத்தனர்; அந்த வழியாகச் சென்ற பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தினர்.  கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்; வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸ் சுட்டதில், தலைப்பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் “முஹம்மத் உமர்” என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு வாலிபரின் நெஞ்சில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாவால் அவரும் பலியாகி விட்டார்.  இறந்த அந்த வாலிபரும் முஸ்லிம் தான் என்று உறுதி செய்யப்பட நிலையில், அவரது பெயர் விவரம் தெரியவில்லை. மேலும் 3 நபர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். (அந்த மூவரும் இறந்து விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன).   போலீஸ் தடியடின்போது நெரிசலில் சிக்கியும், மிதிபட்டும் 47 பேர் படுகாயமடைந்தனர்.  அமைதியான முறையில் நடந்து முடிந்த, இந்த அறப்போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கோடு திட்டமிட்ட சதி செயல் காரணமாகவே விரும்பத்தகாத இந்த சம்பவங்கள் நடை பெற்றுள்ளதாக முஸ்லிம் தலைவர்கள் கூறுகின்றனர்.     மும்பை காவல் துறை ஆணையர் அரூப் பட்நாயக் கூறியது: வன்முறைக்கான காரணம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.  மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், அனைவரும் அமைதியாக இருக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  வன்முறை சம்பவம் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாகவும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ரசா அகாடமியின்  பொதுச் செயலாளர் முகமது சயீத் கூறுகையில், “”இந்த வன்முறைச் சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. வன்முறையை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம்” என்றார்.

Add Comment