ஹாயாக உலா வரும் போலி டாக்டர்கள்: போலீசாரிடம் சிக்குவார்களா?

தமிழகத்தில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
போலி டாக்டர்கள் கைது என்று செய்தித்தாள்களில் அவ்வப்போது பார்க்கலாம். சில நாட்களிலேயே அந்த பரபரப்பு ஓய்ந்துவிடும். மக்களும் அதை மறந்து விடுவர். சமீபத்திலும் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படி சில மாவட்டங்களில் கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போலி டாக்டர்களை அடையாளம் காணும் பணிகள் நடக்கின்றனவா என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் படித்தவர்கள் எல்லாம் இப்போது அவரவர் எல்லையைத் தாண்டி அலோபதி சிகிச்சை செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு போலி டாக்டர்களைப் பிடிக்க நடந்த சோதனையின்போது மாவட்ட அளவில் 23 பேரும், மாநகர அளவில் 11 பேரும் சிக்கினர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 11 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கெடுபிடிகளால் 50க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் மருத்துவமனைகளை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். தென்காசி, புளியங்குடி, கடையம், வள்ளியூர், ராதாபுரம், தூத்துக்குடி பகுதிகளில் அதிக போலி டாக்டர்கள் உலா வருகின்றனர். கூடங்குளத்தில் வட மாநிலத்தவர் Buy Viagra Online No Prescription அதிகம் இருப்பதால் இந்தி பேசும் போலி டாக்டர்கள் உலா வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:oneindia.in

Add Comment