கடையநல்லூரில் அரசு கல்லூரி திறப்பு விழா

கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடந்தது.
கடையநல்லூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நேற்று நடந்தது. சென்னையில் வீடியோ கான்பரசிங் மூலம் புதிய அரசு கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்ததை தொடர்ந்து அதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக விழா நடந்தது.

Buy cheap Doxycycline class=”aligncenter size-full wp-image-30089″ title=”01″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/08/01.png” alt=”” width=”500″ height=”332″ />

கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., துணைவேந்தர் குமரகுரு தலைமை வகித்தார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர் முருகன் வரவேற்றார். தேர்வாணையர் துரைராஜ், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பால்பாண்டி, கடையநல்லூர் அரசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சங்கர ஆவுடையம்மாள், அதிமுக., தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, கம்பனேரி பஞ்., தலைவர் மூக்கையா, கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜா முத்துக்குமார் உட்பட பலர் பேசினர்.

விழாவிற்கு தலைமை வகித்து நெல்லை பல்கலை., துணைவேந்தர் குமரகுரு பேசுகையில், “”கடையநல்லூரில் நெல்லை பல்கலை., உறுப்பு கல்லூரி துவக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் செந்தூர்பாண்டியனின் பணி சிறப்புக்குரியதாகும். மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பகுதியில் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள “தமிழ்நாடு விஷன் -2023′ என்ற தலைப்பில் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு நெல்லை பல்கலை., மூலம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளது” என்றார்.

விழாவில் கடையநல்லூர் யூனியன் துணை தலைவர் கம்பனேரி பெரியதுரை, மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, தங்கவேலு, ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன்,சங்கரபாண்டியன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளரும், அச்சன்புதூர் டவுண் பஞ்., தலைவருமான டாக்டர் சுசீகரன், பண்பொழி செயலாளர் பரமசிவன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் யாத்ரா பழனி, செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் சீனித்துரை, மாவட்ட பிரதிநிதி பெருமையாபாண்டியன், நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார்,நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகன், கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், முத்துபாண்டி, வலங்கையாபாண்டியன், கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் முத்துகிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்கு கடையநல்லூர் தொகுதி அதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா சென்னையில் கடையநல்லூர் அரசு கல்லூரியை திறந்து வைத்த தகவல் தெரிவித்த அடுத்த சில நொடிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடிக்க செய்தனர்.

Add Comment