உனைத் தேடும் நான்

கொதித்து புகைந்து
கண் மூடித் திறக்கையில்
கரைந்து போன உன் பிம்பம்

தூர இருக்கையில் தெரியும் உன்
அருகாமை ஸ்பரிசம்

உறைந்த உதடு தொட்டு
நீ தந்த ஆழ முத்தம்

விழைந்து நிற்கும் உன்
மாருக்கிடையில் புதைந்து
தொலைந்த என் மூச்சு

முகமென்றும் உடலென்றும்
பிரித்தறியா buy Levitra online உன் இதழின்
வேர்ப்பக்கம்

கல்லெறிந்து உடைபட்ட
கண்ணாடியாய் என்னிதயம்
அடைந்து ஒடுங்கி உன் மார் தேடி

கொதித்து புகைந்து
ஓடித் தேடி
விழுந்து எழுகையில்
என்னைப் பிடிக்க இல்லை உன் கைகள்
எப்போது வருவாய் எனைத் தேடி

பிரிவது கொடியதெனினும்
நினைப் பிரிந்தது
உயிர்பிரிவை விடக் கொடிது

Add Comment