கடையநல்லூரில் வரி செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை : நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

கடையநல்லூர் நகராட்சியில் வரி இனங்களை செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி ஆகியவற்றையும், வியாபாரிகள், குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய குத்தகை இனங்களுக்கான ஏலம் கேட்கப்பட்ட மீதி தொகை ஆகியவற்றையும் காலதாமதம் செய்யாமல் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும். சனிக்கிழமை விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் நலன் கருதி கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய சிறப்பு கவுண்டரிலும் பணம் செலுத்தி கொள்ளலாம். Cialis No Prescription வரி செலுத்தாதவர்களை நகராட்சி கமிஷனர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மகேஷ்வரன், நகரமைப்பு செயலாளர் சேக்அப்துல்காதர், மேலாளர் ஆறுமுகம் மற்றும் வருவாய் உதவியாளர்கள் முருகேசன், துரைக்குமாரசாமி, மணிகண்டன், மாடசாமி, சண்முகம், செந்தில்குமார், செல்லம்மாள், முருகம்மாள், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சந்தித்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிவிபரம் மற்றும் பழைய பாக்கியை செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர். துப்புரவு அலுவலர் கணேசமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், கைலாசம், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அர்ச்சுனன், குமார் ஆகியோர் கொண்ட குழுவினரும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும், துண்டு பிரசுரங்கள் மூலமும் வரிசெலுத்த வேண்டுமென்று கூறி வருகின்றனர். கடையநல்லூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி, குத்தகை இனங்களுக்கான பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டு நகராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திடும் வகையில் வரிஇனங்களை உடனே செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment