சீன அதிபர் ஜின்டாவோவின் முழுப் பொறுப்பில் திபெத், தலாய் லாமா விவகாரம்: விக்கிலீக்ஸ்

சீனாவில் எப்படியோ, ஆனால், அரசை நிர்வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் உண்மையான ஜனநாயகம் நிலவுவதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், அனைத்து விவகாரங்களையும் இந்த பொலிட்பீரோதான் தீர்மானிக்கிறது. அதேசமயம், திபெத் மற்றும் தலாய் லாமா குறித்த விவகாரத்தை முழுமையாக கையாளுவது அதிபர் ஹூ ஜின்டாவோதான் என்றும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறி்த்து சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அனுப்பி வைத்த ரகசிய கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையான டெர் ஸ்பீஜெல்லில் வெளியாகியுள்ள செய்தி…

சீன அரசை நிர்வகிப்பது, அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோதான். இதில் 24 ஆண்கள் மற்றும் 1 பெண் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

சீனாவில் ஜனநாயகம் Buy Levitra இருக்கிறதோ இல்லையோ. இந்த பொலிட்பீரோவில் முழுமையான ஜனநாயகம் விளங்குகிறது. மிக முக்கியப் பிரச்சினைகள் பொலிட்பீரோவில் வைத்துதான் முடிவெடுக்கப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களும் சம்மதித்தால்தான் எந்த ஒரு பிரச்சினைக்கும் ஒப்புதல் தரப்படுகிறது.

ஒரு உறுப்பினர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தாலும் கூட அனுமதி கிடைக்காது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் வீட்டோ அதிகாரம் கொடுத்து வைத்துள்ளனர். எனவே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஒட்டுமொத்த பொலிட்பீரோவின் சம்மதமும் அவசியமாகிறது.

சாதாரணப் பிரச்சினைகளைக் கவனிக்க 9 பேர் கொண்ட ஒரு குழுவை வைத்துள்ளனர். அது அந்தப் பிரச்சினைகளைக் கவனி்த்துக் கொள்கிறது.

பொலிட்பீரோவில் எடுக்கப்படும் முடிவு உள்ளிட்டவை, யாருக்கு அதிகாரம் உள்ளது, யார் யார் எந்தக் கருத்தை தெரிவித்தனர், யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது யாருக்குமே தெரியாது. ஆளும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கு மட்டுமே இது தெரியும்.

அனைத்துப் பிரச்சினைகளையும் பொலிட்பீரோ கவனித்தாலும் கூட திபெத் மற்றும் தலாய் லாமா குறித்த பிரச்சினையை அதிபர் ஹூ மட்டுமே கவனிக்கிறார். தலாய் லாமாவை மிகக் கடுமையாக வெறுப்பவர் ஹூ. அவரை ஒரு துரோகியாக ஹூ கருதுகிறார். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் யாரேனும் தலாய் லாமா குறித்து பரிதாபப்பட்டாலும் கூட அவர்களுக்கு வேலை காலியாகி விடும். அந்த அளவுக்கு தலாய்லாமாவை கடுமையாக வெறுப்பவர் ஹூ என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment