கனமானக் காரணம்..

உறவுகளுடன்

Buy Cialis Online No Prescription style=”text-align: justify;”>இணைந்து வாழ்கிறோம்

இணையத்தில் மட்டும்;

பணயமாக பயண வாழ்க்கை!

குழந்தையின் எதிர்க்காலத்திற்கு

எங்களின் நிகழ்கால

முதலீடு வளைகுடா வாழ்வு!

விட்டுவந்தச் சொந்தங்கள்

மனதைத் தொட்டுக்கொண்டிருக்கும்;

விழிகளில் நீர் தொங்கிக்கொண்டிருக்கும்!

வருஷத்திற்கு ஒரு முறை

வீசும் காற்றாய் நாங்கள் நாட்டில்;

மூட்டை முடிச்சுடன்

மூட்டுவலிக்கு தைலமும்!

விதைப்போட்டிருக்கும் நரைமுடிகள்;

கட்டிப்பிடிக்க வேண்டிய பிள்ளைகளோ

கதைக்கேட்க எத்தனித்திருக்கும்

தந்தையைத் தாத்த என எண்ணி!

தவழும் வயதில் கண்ட

மழலை இன்றுத் தாவும் வயதில்;

நெருங்காத என் பிள்ளை

நொருங்கிப் போன நாங்கள்!

ஒட்டி உறவாடவே அரை மாதம்

ஒட்டியப்பின் வெட்டிவிடும் அவலம்!

கனமானக் காரணம்

பாலையில் வேலை!

Add Comment