துபாய் போட்டியில் சானியா `சாம்பியன்’

துபாயில் நடைபெற்ற அல் ஹப்தூர் சேலஞ்ச் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா, செர்பிய வீராங்கனையான ஜோவனோவ்ஸ்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

buy Lasix online style=”text-align: justify;”>முதல் செட்டை கோட்டை விட்ட சானியா, அடுத்த 2 செட்களில் அசத்தினார். குறிப்பாக கடைசி செட்டில் ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல், எதிராளியை திணறடித்தார். 2 மணிநேரத்திற்கு மேலாக நீடித்த இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா 4-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் சானியாவுக்கு ரூ.34 லட்சம் பரிசுத்தொகையும், 110 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. துபாயில் தனது கணவர் சோயிப் மாலிக்குடன் வசித்து வரும் சானியாவுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. வெற்றிக்கு பிறகு அவர் கூறுகையில், `இந்த ஆண்டின் தொடக்கம் எனக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் ஆண்டின் இறுதி வெற்றிகரமாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

Add Comment