வீதியில் கூவி கூவி விற்கப்பட்ட 10 ம் வகுப்பு வினாத்தாள்: பரபரப்பு விற்பனை

இன்று Buy cheap Levitra நடைபெறும் 10-ம் வகுப்பு அரையாண்டு கணித வினாத்தாள் உசிலம்பட்டி வீதிகளில் கூவி கூவி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. இதில் 10 மற்றும் 12-வது வகுப்புகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படுகிறது.

அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சீல் வைக்கப்பட்ட உறைகளில் குறிப்பிட்ட மையங்களில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டன. இன்று 10-வகுப்புக்கு கணிதத் தேர்வு. ஆனால் நேற்றே அந்த வினாத்தாள் உசிலம்பட்டியில் வெளியாகிவிட்டது. வெளியாகிய வினாத்தாளை சிலர் ஜெராக்ஸ் எடுத்து லாபம் பார்க்கத் துவங்கினர்.

தெருவில் காய்கறி விற்பது போன்று வினாத்தாள் விற்கப்பட்டது. கணித வினாத்தாள் வெளியாகி ஜெராக்ஸ் கடைகளில் ஜோராக விற்பனை நடப்பது குறித்து அறிந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து வாங்கிச் சென்றுள்ளனர்.

ஒரு வினாத்தாள் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்குத் தான் எவ்வளவு ஆவல். பிள்ளை எப்படியாவது மார்க் எடுத்தால் போதும் என்று நினைத்துவிட்டனர் போலும்.

இதையடுத்து மதுரை மாவட்டத்தில் இன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Add Comment