புளியங்குடியில் எலுமிச்சை விலை கிடு கிடு உயர்வு!

தமிழகத்தில் எலுமிச்சை சாகுபடியில் புளியங்குடி முதலிடம் வகிக்கிறது. சமீபகாலமாக புளியங்குடி பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் எலுமிச்சை விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து வழக்கத்தைவிட கணிசமாக குறைந்து விட்டது.

இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகைக்காக வியாபாரிகள் அதிக அளவில் எலுமிச்சை கொள்முதல் செய்து வருகின்றனர். கேரள வியாபாரிகள் புளியங்குடி வந்து கொள்முதல் செய்கின்றனர்.

மேலும் Bactrim No Prescription புளியங்குடியில் இருந்து கேரளாவுக்கும் அதிக அளவில் எலுமிச்சை அனுப்பப்படுகிறது. இதனால் எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

முதல் தரமான எலுமிச்சை 1000 காய்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது. அது இன்று ரூ.3500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 2-ம் தரமான எலுமிச்சை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்துக்கும், 3-ம் தரமான எலுமிச்சை ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரையும் விற்கப்படுகின்றன.

Add Comment