தீவிரவாதம்:ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து விசாரணை தேவை – காங்கிரஸ்

இந்திய தேசத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெட்டவெளிச்சமான சூழலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் பயங்கரவாதத் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி 83-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். இதனை புறக்கணிக்கக் கூடாது என அந்த தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதனை உறுதியாகவும், பயன் தரத்தக்க வகையில் எதிர்கொள்ள வேண்டும் என தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

Levitra No Prescription style=”text-align: justify;”>முதல்முறையாக பயங்கரவாதத்தின் பெயரால் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயரை வெளிப்படையாக கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பா.ஜ.க மற்றும் அதன் சகோதர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்டவைகள் வெறுப்பையும், வன்முறையையும் பிரச்சாரம் செய்துவருகின்றன. இது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகும். தேசத்தை தகர்ப்பதற்கு இவர்கள் முயல்கின்றார்கள். பயங்கரவாத செயல்பாடுகளில் இவர்களின் தொடர்பை கண்டறிவதற்காக தீவிர விசாரணை தேவை.

இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடி மதசார்பற்ற கொள்கையாகும். சுதந்திர போராட்டம் நடந்ததும் மதசார்பற்ற கொள்கையின் அடிப்படையிலாகும். ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.கவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மதசார்பற்றக் கொள்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு காரணமான அனைவரையும் விசாரணைச் செய்யவேண்டும். சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் சூழலில் கலவரத் தடுப்பு மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Add Comment