அடுத்த வாரம் பெட்ரோல் விலையில் ரூ.3 உயர்வு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வடைவதால், செப்டெம்பர் முதல் வாரமளவில் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ3. உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மும்பையில் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விற்பனை மீது நஷ்டம் அதிகரித்துள்ளது. எனவே விலை உயர்வை தவிர்க்க முடியாது என கூறியுள்ளார்.

தற்போது குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே நிலக்கரி ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. எனவே கூட்டத்தொடர் முடிந்ததும் செப்டெம்பர் முதல் வாரத்தில் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படலாம் என பெட்ரோலிய அமைச்சு வட்டாரங்களை சுட்டிக்காட்டி இத்தகவல்கள் வெளியாகின்றன.

கடந்த மாதம் 24ம் திகதி பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. பெட்ரோல் ரூ7 உயர்த்தப்பட்டு Cialis No Prescription பிறகு மீண்டும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 10 டாலர் வரை உயர்ந்துவிட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 113 டாலராக உள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் கடும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Add Comment