மால்கம் எக்ஸ் நூல் வெளியீட்டு விழா

பகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முற்றுப் பெறுகிறதோ அங்கிருந்து இறை ஞான வெளிப்பாடு துவங்குகிறது தலைவர் பேராசிரியர் மனிதனின் பகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முற்றுப் பெறுகிற தோ அங்கிருந்து இறை ஞான வெளிப்பாடு துவங்கு கிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் எழுதி உயிர்மை பதிப்பகத் தின் சார்பில் மால்கம் எக்ஸ் வரலாற்று நூல் வெளி யீட்டு விழா சென்னை தேவனேய பாவாணர் நூலக அரங்கில் நேற்று (18.12.2010) நடைபெற்றது. மால்கம் எக்ஸ் நூலினை வெளியிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிக்குமார் எழுதி உயிர்மை பதிப்பகத் தின் சார்பில் மால்கம் எக்ஸ் என்ற இந்த நூலினை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு சகோதரர் மனுஷ்ய புத்திர னுக்கு எனது வாழ்த்துக் களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் மால்கம் எக்ஸ் என்ற இதே தலைப்பில் சகோதரர் குலாம் முஹம்மது அவர் களும் ஒரு நூலினை எழுதி ஏற்கெனவே வெளியிட்டுள் ளார். இப்போது ரவிக்குமா ரும் அதே தலைப்பிலான நூலினை எழுதி இன்று வெளியிடப்பட்டுள்ளது சகோதரர் குலாம் முஹம்மது நூலினையும், இந்த நூலினையும் படிக் கும்போது இரண்டுக்கும் இடையே சில வேறுபாடு களை காண முடிகிறது.

மால்கம் எக்ஸ் அமெ ரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக பல்வேறு வகைகளில் உழைத்தவர். கடைசியில் அவர் பூரண விடுதலை பெறும் வழியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அந்த கொள் கையை கறுப்பின மக்கள் அனைவருக்கும் எடுத் துரைத்து அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் பணியினை-இஸ்லாத்தை பரப்புரை செய்யும் பணி யினை அவர் மேற்கொண் டார். சகோதரர் குலாம் முஹம்மது நூல் இந்த கோணத்தில் மால்கம் எக்ஸ்-ன் இஸ்லாமிய வாழ்க் கையை, இஸ்லாமிய பிரச்சாரத்தை முக்கியத்து வம் கொடுத்து விளக்கும் வகையில் அமைந்துள் ளது ஆனால், ரவிக்குமார் தனது நூலில் மால்கம் எக்ஸ்-ஐ ஒரு சமூக சீர்த் திருத்த வாதி என்ற அள வில் அறிமுகப்படுத்துகி றார். மால்கம் எக்ஸ் இஸ் லாத்தை ஏற்று முஸ்லிம் ஆனதை பதிவு செய்துள்ள போதிலும், அவர் கறுப் பின மக்களுக்கு எவ்வா றெல்லாம் உழைத்தார். அந்த சமூகத்தில் எத்தகைய சீர்திருத்தம் மேற்கொண் டார் என்பதை முக்கியத்து வம் கொடுத்து இந்த நூலில் விளக்கியுள்ளார் ரவிக்குமார் மால்கம் எக்ஸ் குறித்த நூலினை எழுதும்போது அவருக்கு நமது இந்திய சூழலும், தமிழக சூழலும் நிச்சயம் கண்முன் வந்திருக்கும். தமிழகத்தில் குறிப் பிட்ட மக்களை தாழ்த்தப் பட்டவர்கள்-தீண்டத்த காதவர்கள் என்றெல்லாம் ஒதுக்கி வைத்து பல்வேறு துன்பங்களுக்கும், துயரங் களுககும் ஆளாக்கியது போன்றே அமெரிக்காவில், கறுப்பின மக்ளை இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கி உள்ளனர் கறுப்பின மக்கள் ஆப் பிரிக்கா கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி வரப்பட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டு வெள் ளைக் காரர்களுக்கு அடி மைகளாக இருந்து பணி புரிய செய்யப்பட்டுள்ள னர் > பெரும்பாலும், ஆப்பி ரிக்காவில் இருந்த அந்த கறுப்பின மக்கள் முஸ்லிம் களாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் அமெ ரிக்காவுக்கு கொண்டு வந்த பிறகு அவர்கள் மீது கிறிஸ் தவ மதம் தினிக்கப்பட்டு-கிறிஸ்தவர்களாக ஆக்கப் பட்டுள்ளனர் கறுப்பின மக்களின் துயரமிகுந்த வாழ்க்கை குறித்தும், அவர்கள் அமெ ரிக்காவுக்கு ஏன்-எப்படி கொண்டு வரப்பட்டார் கள் என்பது குறித்தெல் லாம் அலெக்ஸ் ஹேலி என்ற உலகப் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் எழுதி யுள்ள “ரூட்ஸ்�� என்ற நூலில் விரிவாக பதிவு செய் துள்ளார் அலெக்ஸ் ஹேலி எழு திய இந்த ரூட்ஸ் நூலினை படித்தவர்கள் இதயங்கள் கனத்து கண்ணீர் வடிக்கும் வகையில் மிக உருக்கமான – பல அதிர்ச்சிகரமான தக வல்களை அறிந்து கொள்ள முடியும் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட் டோர்களின் வழித்தோன்ற களில் ஒருவராகத்தான் மால்கம் எக்ஸும் திகழ்கி றார் எக்ஸ் என்றால் அடை யாளமற்வர்கள்-தனது வரலாறு இன்னது என்று தெரியாதவர்கள் என்ற பொருளில்தான் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் மால் கம் தனது பெயரோடு எக்ஸ் என்பதை இணைத்து அழைக்கப்பட்டார் அவர், பள்ளி மாண வராக இருந்தபோது ஓர் ஆசிரியர் நீ படித்து என்ன ஆகப் போகிறாய்? என கேட்கிறார். அதற்கு மால் கம் “நான் வழக்கறிஞர்�� ஆவேன் எனக் கூறுகிறார். அதற்கு அந்த ஆசிரியர் “நீ எல்லாம் ஏன் அதற்கு முயற் சிக்கிறாய்�� தச்சர் தொழிலை படிக்க வேண் டியதுதானே என கூறுவ தாக இந்த நூலில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட் டுள்ளன இதே போன்ற வார்த்தை கள், சிந்தனைகள் ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது மண்ணிலும் நிகழ்ந் துள்ளது. மூதறிஞர் ராஜாஜி கோலி விளையாடுவது மிக வும் சிறந்த விளை யாட்டு அதனை விட்டு விடாதீர் கள் என தமிழக மக் களுக்குஅறிவுரை கூறிய தும், குல கல்வி திட்டம் என ஒன்றை கொண்டு வந்த தையும் நாம் நினைத் துப் பார்க்கின்றோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நமது இந்தியா வில்-தமிழகத்தில் எத்த கைய எண்ணப் போக்கு கள், சமுதாய நிகழ்வுகள் இருந்தனவோ அது போன்றே அதே கால காட் டத்தில் அமெரிக் காவிலும் இருந்துள்ளது. buy Viagra online இங்கு திராவிட இயக் கங்கள் எதற்காக பாடு பட்டனவோ, எத்தகைய சமுதாய மாற்றத்தை விரும்பி உழைத்தனவோ அதுபோன்றே அமெரிக் காவில் மால்கம் எக்ஸ் உள் ளிட்டவர்கள் உழைத் துள்ளனர் இந்த நூலில் எலிஜா முஹம்மது என்பவர் குறித்து ரவிக்குமார் சில தகவல்களை பதிவு செய் யும்போது அது இஸ்லாத் தின் அடிப்படை கொள் கைகளுக்கு மாற்றமாக அமைந்திருப்பதை உணர முடிகிறது மால்கம் எக்ஸ்-க்கு இஸ் லாம் மார்க்கத்தை அறி முகப் படுத்தி அவருக்கு ஒரு ஆசானாக, வழிகாட்டியாக இருந்தவர் எலிஜா முஹம் மது. ஆனால், அவர் தன்னை இறைத்தூதராக நபியாக கூறிக்கொண்டார் என இந்த நூலில் காணப் படுகிறது முஸ்லிம்கள் நம்பிக் கைப் படி முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் இறுதி இறைத்தூதர். அவருக்கு பின் எந்த நபியும் வரமாட் டார்.

அப்படி எவரா வது தன்னை நபி என்று சொன் னால் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட் டார்கள்.அதுபோன்றே எலிஜா முஹம்மது அல் லாஹ்-இறைவன் குறித் தெல்லாம் பேசும்போது, மனிதன் அல்லாஹ்வாக ஆக முடி யும் என கூறு வதாக இந்த நூலில் பதிவு செய்யப்பட் டுள்ளது. இஸ்லாமிய இறை நம்பிக்கையின் அடிப்படை விதி இறைவன் என்பவன் அதுஅல்லாத-அவன் அல்லாத- அவள் அல்லாத- ஒன்றிற்கு தான் அல்லாஹ் என இஸ்லாம் பெயர் சூட்டுகிறது ஆண்-பெண்-அஃறினை என எதுவும் இல்லாத-எதனோடும் ஒப்பிட முடியாத பற்றுக் கோடு ஒன்றில்லாமல் தானே உருவான ஒரு தத்துவத்திற்கு பெயர்தான் அல்லாஹ் என இஸ்லாம் கூறுகிறது மனிதன் ஒருவன் அல்லாஹ் ஆக முடியும் என கூறுவது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கு முரணான தாகும். தமிழ் நெறியின் சைவ சித்தாந்த நெறியின் முடி வான-முழுமையான வடி வமாக அமைந்திருப்பது தான் இஸ்லாம் ஆகும் இன்று இஸ்லாத்தின் பெயரால் பல பல கொள் கைகள், பலவிதமான கருத் துகள் உலகம் முழுவதும் நிலவி வருகின்றன. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் வஹி மூலமாக இறைவனால் அருளப்பட் டது. மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் முதலில் இறை செய்திகள் இறங்கின. இவை அனைத்தும் ஏகத்து வம் குறித்தும்-மனித குல ஒருமை குறித்தும் தெளி வாக-விரிவாக விளக்கு கின்றன > கலப்படமற்ற இந்த போதனைகள் நபிகள் நாய கம் (ஸல்) காலத்திலேயே இந்தியாவின் தென்பகுதி யில் அறிமுகமாகி இங் குள்ள மக்களால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கடைபிடிக்கப் பட்டு வரப்படுகிறது நபிகளாரின் மதினா வாழ்க்கையில் 10 ஆண்டு காலம் இறங்கிய இறை வசனங்கள் அரசியல் ரீதியான கோட்பாடுகளை விளக்குகின்றன. நபிகளா ருக்கு பின் அவருடைய தோழர்களான கலீபாக் களின் ஆட்சி காலத்தின் போது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை களுக்கு பலவித விளக்கங் கள்-தெளிவுகள் அளிக்கப் பட்டன அதன்பின், உமய்யாக் களின் ஆட்சிக்காலத்தில் கூறப்பட்ட விளக்கங்கள், அதன்பின் அப்பாசியா களின் காலத்தில் அதன் பின் உதுமானிய பேரரசு ஆட்சி காலத்தில் கூறப் பட்ட விளக்கங்கள் என இஸ்லாமிய வரலாறு குறித்து நான்கு விதங்களில் நாம் விரிவான தகவல்களை பெற முடிகிறது இவை அனைத்திலும் அடிப்படை விஷயங்கள் கொள்கைள் ஒன்றாக இருந்தபோதிலும் விளக் கம் சொல்வதில் பல வித மான முறைகள் பின்பற்றப் பட்டிருக்கின்றன அப்படிதான் எலிஜா முஹம்மது தன்னை நபி என்று வாதிட்டதும், அடங்கியிருக்கிறது. மேலும், இந்த நூலில் மால்கம் எக்ஸ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போது தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டதுடன் தாடியை யும் சிரைத்துக் கொள்ள வேண்டும் என்பதுபோல பதிவாகியுள்ளது ஹஜ்ஜின் போது தலையை மொட்டை அடித்துக் கொள்வதும், முடியை வெகுவாக குறைத்து வெட்டிக் கொள் வதும் உண்டு. ஆனால், தாடியை எடுக்க வேண்டிய தேவை இல்லை ஆனால், இந்த நூலில் அப்படி பதிவு செய்யப்பட் டுள்ளது.இதுபோன்ற சில குறைபாடுகள் இந்த நூலில் இருந்த போதிலும் மற்ற படி மால்கம் எக்ஸ் ஒடுக் கப்பட்ட ஒரு சமூக மக்க ளின் விடுதலைக்காக உழைத்ததை ரவிக்குமார் அவர் பார்வையில் அவரது சிந்தனைக்கு ஏற்ப பதிவு செய்துள்ளார்.

ஜாதி-மதம்-இனம்-குலம்-மொழி தேசம் என எந்த வேறுபாடும் இல்லா மல் படைத்த இறைவன் முன் மனிதர் குலம் அனைத்தும் ஒன்றிணை யும் ஓர் நிகழ்ச்சி தான் ஹஜ் ஆகும். நமது தமிழகத்தில் கூட “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்�� என்ற தத்து வம் சொல்லப்படுவதுண்டு. தமிழக முதல்வர் கலைஞர் கூட இந்த தத்துவத்தை உலகெங்கும் பரப்பும் நோக்கில் தமிழ் செம் மொழி மாநாட்டினை நடத்தினார் நாம், பல ஜாதி பல மதம் என இருந்தாலும் அனைவரும் ஒரே தாய்-தந்தையிலிருந்து பிறந்தவர் கள், ஒரே மூலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதுதான் இஸ்லாம் விளக்குகிறது பகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முடிவடை கிறதோ அங்கிருந்து இறை வனின் வல்லமை குறித்த ஞானம் துவங்குகிறது. என் பார்கள் ரவிக்குமார் ஏதோ ஒரு தேடலின் காரணமாகவே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த நூலும் கூட அவருடைய தேடுதலின் வெளிப்பாடு தான். அவர் தேடுவது அவ ருக்கு கிடைக்க இறைவன் அருள் செய்ய வேண்டும் இந்த நூலினை முடிக் கும் போது மால்கம் எக்ஸ் கூறியதாக ஓர் வாசகத்தை பதிவு செய்து முடித்துள் ளார். அதாவது நாம் அனைவரும் என்றாவது ஒரு நாள் புரிந்துணர்வு ஒளியின் கீழ் சந்திப்போ மாக என்பதுதான் அந்த வாசகம். அந்த உண்மை ஒளியின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக என்று கூறி எனது உரையினை முடித் துக் கொள்கிறேன் இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார் இந்நிகழ்ச்சியில் தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாக நாதன், விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், உலகத் தமிழ் ஆராய்சி இயக்க தலைவர் குணசேகரன், பத்திரிகையாளர் பகவான் சிங் உள்ளிட்டோரும் உரையாற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செய லாளர் கமுதி பஷீர், முஸ் லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை செயலாளர் மில் லத் இஸ்மாயீல், மாநில இளைஞர் அணி அமைப் பாளர் கே.எம்.நிஜாமுதுன், ஏ.கே. ரபி, எழுத்தாளர் மாணாமக்கீன், மணிச்சுடர் ஹமீத் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

— Thanks Manisudar Tamily Daily

Add Comment