மதநல்லிணக்கம் பேணுமா பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: “சட்டம் – ஒழுங்கு பரச்னை, கட்டாய மதமாற்றம் போன்ற காரணங்களால், பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் வெறுப்படைந்து, இந்தியாவில் தஞ்சம் அடையவில்லை’ என, பாக்., அதிபர் சர்தாரியால் நியமிக்கப்பட்ட கமிட்டி, தன் அறிக்கையில் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், பற நாடுகளில் குடியேறுகின்றனர் என, கூறி விட முடியாது. குறிப்பாக, அவர்கள் இந்தியாவில் குடியேறுவதில்லை. இந்திய குடியுரிமை வாங்குவது மிகவும் எளிதான விஷயமல்ல. ஐக்கிய அரபு எமிரேட், கனடா, பரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் இந்து மதத்தினர், தங்களின் பாகிஸ்தான் குடியுரிமையை ரத்து செய்யவில்லை. என்றும் அறிக்கை கூறுகிறது.

பாக்கிஸ்தானில் கட்டாய மதமாற்றம் நடத்தப்படுவதாக இதுவரை இல்லாத ஒரு புதிய சர்ச்சை உண்டாகி இருக்கிறது. அஸ்ஸாம் மதகலவரத்தை திசை திருப்பவும், இழந்த தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும் பாரதிய ஜனதா கட்சி பலவிதமான சர்ச்சைகளை அடிக்கடி கிளப்பி வருகிறது. அதுபோல் உள்ள சர்ச்சைகளில் இதுவும் ஒன்றா என்பது ஆராயப்பட வேண்டும்.

அதே நேரம் கட்டாய மதமாற்றம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று அப்படியிருக்க இதுபோன்ற காரியங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், முஸ்லிம்களை போல சம உரிமை பெற்றவர்கள். அவர்களின் மன வேதனையைப் புரிந்து கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த காரணத்தையும் கூறி, அவர்களிடம் வேற்றுமை காட்டக்கூடாது. அவர்கள் வரி செலுத்துகின்றனர், சட்டத்தை மதித்து நடக்கின்றனர். இருந்தும், அவர்கள் மன வேதனை அடைகின்றனர் என்றால், அதற்கான காரணத்தை கண்டுபடித்து உடனே அது களையப்படவேண்டும். எந்த ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் நலம் பெற வில்லையோ அந்த நாடு எல்லா வழிகளிலும் பின்தங்கி போகும்.

உண்மையிலேயே சிறுபான்மை ஹிந்துக்களை பாகிஸ்தான் நசுக்குமேயானால் அதை இந்திய முஸ்லிம்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்களை பாகிஸ்தான் அரசு தடுக்க முடியவில்லை என்றால்  அங்கிருக்கும் ஹிந்துக்களின் பாதுகாப்பை முன்னிட்டு  அவர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்து யூனியன் பிரதேசங்களாக Buy Doxycycline Online No Prescription அறிவிக்க வேண்டும். இப்படி செய்து மதநல்லிணக்கம் பேணுமா பாகிஸ்தான்.

-அதிரை சலீம்.

Add Comment