தந்தையிடம் இருந்து மோகன் பகான் கிளப்பை வாங்கும் சித்தார்த் மல்லையா: விஜய் மல்லையா ராஜினாமா

ஆசிய கால்பந்து சம்மேளன விதிகளின்படி மோகன் பகான் கால்பந்து கிளப் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் மல்லையா. ஆனால் அவர் ஈஸ்ட் பெங்கால் கிளப்பின் சேர்மன் பதவியில் தொடர்ந்து இருப்பார்.

கடந்த 16-ம் தேதி கொல்கத்தாவில் மோகன் பகான் கிளப்பின் கூட்டம் நடந்தது. அதில்தான் மல்லையா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்ததார்.

மோகன் பகானின் செயலாக்க மேனேஜரான பிரின்ஸ் ரூபஸ் சித்தார்த் மல்லையா கிளப்பின் கூடுதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது குறித்து ரூபஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய் மல்லையா யுனைடெட் மோகன் பகான் புட்பால் டீம் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் மற்றும் இயக்குநர் குழு தலைவர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா முடிவை வருத்தத்துடன் இயக்குநர் குழு பெற்றுக் கொண்டது,” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் ஆகிய இரண்டு கிளப்புகளின் தலைவராக மல்லையா இருக்க முடியாது. இது ஆசிய கால்பந்து சம்மேளன விதிகளுக்கு புறம்பானதாகும். அதனால் அவர் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அனைத்து இந்திய கால்பந்து சம்மேளன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Buy Cialis style=”text-align: justify;”>ஆசிய கால்பந்து சம்மேளன கிளப் உரிம விதிப்படி எந்த ஒரு தனி நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிளப்புகளில் 50 சதவிகிதத்திற்கு அதிகமாக பங்குகள் வைத்திருக்கக் கூடாது. இந்த விதி 2010-2011 சீசன் முடிவதற்குள் அமல்படுத்தப்படும். அதனால் ஏதாவது ஒரு கிளப்பில் ராஜினாமா செய்யத்தான் வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மோகன் பகன் மற்றும் ஈஸ்ட் பெங்கால் கிளப்புகளை மெக்டோவல் மற்றும் கிங்பிஷர் ஸ்பான்சர் செய்தாலும், இரண்டுமே மல்லையாவின் சொந்தமான யுனைடெட் ப்ரூவரீஸ் குரூப்-க்கு சொந்தமானவை.

வரும் 24-ம் தேதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட கிளப்புகள் வைத்திருப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க ஏஎப்சி கெடு விதித்துள்ளது.

வரும் 31-ம் தேதிக்குள் கட்டளை விதிகளை பூர்த்தி செய்யாத கிள்பபுகள் வரும் லீக்கில் விளையாட முடியாது என்று அனைத்து இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் படேல் அறிவித்துள்ளார்.

Add Comment