பாராளுமன்றத்தை முடக்கும் பா.ஜ.கவால் தினமும் ரூ.2 கோடி மக்கள் பணம் வீண்!

நாட்டு நலனையோ, நாட்டு மக்கள் மீது அக்கறையோ இன்றி தனது பாசிச ஹிந்துத்துவ அரசியல் ஆதாயத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் கட்சிதான் பாரதீய ஜனதா கட்சி என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

உட்கட்சி பூசல், பாசிச அரசியல் ஆகிய காரணங்களால் மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் பாரதீய ஜனதா கட்சி, நிலக்கரி ஒதுக்கீட்டு முறைகேட்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை காரணம் காட்டி மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது. இதனால் அலுவல்கள் எதுவும் நடைபெறாமல், நாட்டு மக்களின் பிரச்சனைகள் பேசப்படாமல் நாள்தோறும் ரூ.2 கோடி மக்களின் பணம் வீணடிக்கபடுகிறது.

அதாவது பாராளுமன்றத்தில் அலுவல்களை நடத்துவதற்கு தினசரி ரூ.2 கோடி செலவு பிடிக்கிறது.

‘பாராளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகத் தொகுதியில் இருந்து டெல்லிக்கு வரும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ரயில், விமான பயணச் செலவு, தங்குமிடம், இதரப் படிகளைக் கணக்கிடும்போது நாள் ஒன்றுக்கு நாடாளுமன்றப் பணிகளுக்கான முழுமையான செலவினம் ரூ. 52 கோடியே 50 லட்சம்’ என நாடாளுமன்ற செயல்பாட்டுக்கான ஆராய்ச்சித் துறை மதிப்பிட்டுள்ளது.

அதன் விவரம்:

“20 அமர்வுகள் கொண்ட பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர்  7-ம் தேதி வரை இந்தத் தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அரசு விடுமுறை,  நாடாளுமன்ற விடுமுறை நாள்கள் நீங்கலாக இதுவரை 14 நாள்களுக்கான அலுவல் அமர்வுகள் முடிந்துவிட்டன. ஆகஸ்ட் 8, 9, 17 ஆகிய நாள்களில் நாடாளுமன்ற அலுவல்கள் முழுமையாக நடைபெற்றன. தொடர்ந்து மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மறைவையொட்டி ஆகஸ்ட் 16-ம் தேதி நாள் முழுவதுமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மேற்கண்ட நான்கு நாட்களைத் தவிர்த்து எஞ்சிய அனைத்து நாள்களிலும் பாராளுமன்றத்தில் அலுவல் முழுமையாக நடைபெறவில்லை. கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடந்த 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் நடைபெற்ற நான்கு நாள் அலுவல், அரை மணி நேரத்தைக் கூட எட்டவில்லை.

அந்த வகையில் மக்களவையில் நடப்பு மழைக்காலத் தொடரின் 50 சதவீத அலுவலும் மாநிலங்களவையில் 62 சதவீத அலுவலும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

1950-களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 நாள்களுக்கு நாடாளுமன்ற அலுவல் நடைபெற்றது. 1970-களில் 100 என அலுவல் நாள்கள் சுருங்கின. 14-வது மக்களவைக் கூட்டத் தொடரின்போது  இது, 73 நாள்களாக மேலும் குறைந்தது. 2011-ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட 520 மணி நேர அலுவலில் 306 மணி நேரம் மட்டுமே மக்களவை நடைபெற்றது.

கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த மே மாதம் வரை நடைபெற்ற கூட்டத்தொடர்களில் சுமார் 12 ஆயிரம் அமளிகளையும் 110 ஒத்திவைப்புகளையும் நாடாளுமன்ற வரலாறு பதிவு செய்துள்ளது” என பாராளுமன்ற செய்லபாட்டுக்கான ஆராய்ச்சித் Buy Ampicillin Online No Prescription துறை கூறியுள்ளது.

பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்குவோம் என பாரதீய ஜனதா பிடிவாதம் பிடிப்பதற்கு இன்னொரு காரணம், குஜராத் நரோடா பாட்டியா கூட்டுப்படுகொலை வழக்கில் வெளியான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். இத்தீர்ப்பில் நீதிபதி, நரேந்திர மோடி அரசுக்கு கூட்டுப் படுகொலையில் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தீர்ப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்பதால் கவலையடைந்து அதனை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Add Comment