குழந்தை வெயிலில் விளையாடணும்’ டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல்

குழந்தைகளை வெயிலில் விளையாட விடாமல் “ஏசி’ அறையில் அடைக்கின்றனர். அதனால், அவர்களுக்கு வைட்டமின் “டி’ குறைப்பாடு ஏற்படும். மேலும், நோய் எதிர்ப்புச் சத்தியும் குறைந்து ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்கலாம்,” என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன் பேசினார். இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் சார்பில், குழந்தைகள் டாக்டர்களுக்கான கருத்தரங்கம் திருச்சியில் நடந்தது. கருத்தரங்கில், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன் பேசியதாவது: மனிதன் உயிர் வாழ தண்ணீர் மற்றும் புரோதம், மாவு, நுண்ணூட்டச் சத்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது. சமீப காலங்களில் இவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. வைட்டமின், தாது உப்பு தேவையான குழந்தைக்கு, தொடர்ந்து ஓராண்டு தாய்ப்பால் கொடுத்தால் போதிய சத்து கிடைக்கும். தாய்ப்பால் இல்லையெனில் குழந்தைக்கு இரும்புச்சத்து குறைப்பாடு ஏற்படுகிறது.

ஒரு வயதில் இருந்து இரண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைவினால் மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது. சைவ உணவை விட, அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. “சரியாக சாப்பிடவில்லை’ என்றால், 12 வயது முதல் 18 வயதுடைய பெண்களுக்கு ரத்தசோகை போன்ற நோய்கள் அதிகமாக தாக்குகிறது. இவர்களுக்கு buy Doxycycline online பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை சரியாக பராமரிப்பதில்லை. புட்டிபால் மூலம் குழந்தைக்கு இரும்புச்சத்து கிடைப்பதில்லை. கேழ்வரகு, நாட்டுச் சர்க்கரை, முட்டை, பச்சை காய்கறிகள் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையுள்ள குழந்தைக்கு, இரும்புச்சத்து நிறைந்த சொட்டு மருந்துகளை வழங்கலாம். இக்காலத்தில், குழந்தைகளை வெயிலில் விளையாட விடாமல் “ஏசி’ அறையில் அடைக்கின்றனர். அதனால், அவர்களுக்கு வைட்டமின் “டி’ குறைப்பாடு ஏற்படும். நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்து ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் குழந்தைகளைத் தாக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Add Comment