ஆகவே தோழர்களே…………! (பீ. எம். கமால், கடையநல்லூர்)

ஒன்றுபட்ட சமுதாயம்
துண்டுபட்டுக் கிடக்கிறது Doxycycline online !
ஒற்றுமையைத் தொலைத்துவிட்டு
ரெண்டுபட்டுக் கிடக்கிறது !
ரெண்டுபட்டு கிடந்தாலும்
ஒட்டவச்சு ஒக்கிடலாம் !
உதிர்ந்த தஸ்பீஹு
மணியாகி அல்லவா
தரையினில் சிதறி
தரமிழந்து கிடக்கிறது !

புனிதமறை நபிவழிகள்
புறக்கணிக்கப் படுகிறது !
போலிமத வாதிகளால்
புனித மிங்கே கெடுகிறது !

ஆலிம்களும் போலிகளும்
அம்பலத்தில் வந்துநின்று
கலப்பட வியாபாரக்
கடைவிரித்து விட்டார்கள் !

பாவம் ! அப்பாவி
முஸ்லிம்கள் எல்லோரும்
குழப்பச் சகதிக்குள்
கூன்விழுந்து கிடக்கின்றார் !

பணம்வேண்டும் என்பதற்காய்
பரமனையே விற்கின்ற
உபதேசிக் கூட்டத்தின்
உபத்திரவம் ஒருபக்கம் !

ஒற்றுமை வில்லை
ஒடித்துவிட்டு பகைமைச்
சீதையை மணக்கின்ற
சிறுமதியார் ஒருபக்கம் !

இப்படித்-
திரும்பும் பக்கமெல்லாம்
தீயவர்களே இருந்தால்
விரும்பும் ஒற்றுமை
வீடுதேடி வருமா ?

ஆகவே தோழர்களே !
ஆலிம்களிடம் கேட்டு
அழகிய மார்கத்தை
தெளிவுடன் கற்று
தெருவுக்கு வாருங்கள் !
போலிகளிடமெல்லாம்
போய்நின்று கைகட்டி
பொருளையும் புத்தியையும்
பொலிவிழக்கச் செய்யாதீர் !

Add Comment