பட்டாசு வெடிப்பது வீணர்களின் விளையாட்டு!

விருதுநகர் மாவட்டம், முதலிப்பட்டியில் உள்ள,பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் இருபெண்கள் உட்பட, 38 பேர்  பலியாயினர், 44பேர் படுகாயமடைந்தனர்.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் ஆபத்தை உண்டாக்கும் இப்படிப்பட்ட ஒரு சடங்கு, கேளிக்கை தேவையா? இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு காது கேளாமை கோளாறு இருக்கிறது, இதற்கு முக்கிய காரணங்களில் பட்டாசு வெடிப்பதும் ஒன்று. 
பட்டாசு வெடிக்கும் பொழுது அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், மூக்கு, தொண்டை, போன்றவற்றில் பல்வேறு கோளாறுகள்  ஏற்ப்படுகின்றது. மேலும் பட்டாசில் கலந்துள்ள பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம், நைட்ரேட், கார்பன் மோனாக்சைடு போன்ற ரசாயன பொருட்களால் நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும், ஆஸ்மாவும் உண்டாகும்.
இதுமட்டும் இல்லாமல் இதை தாயாரிக்கும் பொழுதும், விற்பனைக்காக வைத்திருக்கும் இடங்களிலும், பண்டிகைகாலங்களில் வெடிக்கும் பொழுதும் எண்ணிலடங்கா விபத்துக்கள் ஏற்ப்பட்டு ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கில் உயிர்கள் பலியாகின்றன. இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான ஒரு பொருளை சடங்கு, கேளிக்கை என்கிற விதத்தில் பயன்படுத்த அரசு எப்படி அனுமதி அளிக்கிறது?
Buy Amoxil style=”text-align: justify;”>சுற்றுப்புற சூழல் மற்றும் மனிதர்களுக்கு கேடு உண்டாக்கும் அபாயகரமான பட்டாசை தாயரிப்பதையும், வெடிப்பதையும் அரசு தடை செய்யவேண்டும். ஒரு நொடியில் மக்களின் பொருளாதாரம் எந்த பிரோயோஜனமும் இல்லாமல் வெடித்து காற்றில் கரைந்து போகிறது. இதனால் யாருக்கு நான்மை, இந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு பசிதீர்க்க உதவலாமே. மனிதர்களுக்கும், இயற்கைக்கும் எந்தவிதத்திலும் பயன்தராத, அதேநேரம் கேடு உண்டாக்கும் பட்டாசுக்கு அரசு நிரந்தர தடைகொண்டுவருமா?

Add Comment