வெ.இண்டீஸ் வீரருக்கு தடை

சர்ச்சைக்குரிய முறையில் பவுலிங் செய்த வெஸ்ட் இண்டீசின் ஷேன் ஷில்லிங்போர்டுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தடை விதித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் ஷில்லிங் போர்டு(27). இவர் சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். இலங்கைக்கு Buy Levitra எதிரான காலே டெஸ்ட் போட்டியின் போது இவரது பந்து வீச்சு சந்தேகம் அளிப்பதாக அம்பயர்கள் ஸ்டீவ் டேவிஸ், ரிச்சர்டு கெட்டில்புரோ மற்றும் “டிவி’ அம்பயர்கள் ஆசாத் ராப், ஜெயவர்தனா ஆகியோர் ஐ.சி.சி.,யிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஐ.சி.சி., சார்பில் கடந்த 9ம் தேதி பெர்த்தில், ஷில்லிங்போர்டுக்கு சோதனை நடத்தப்பட்டது.
இதில் பவுலிங் செய்யும் போது விதியை மீறி (15 டிகிரி), இவரது முழங்கை 17 டிகிரி அளவுக்கு வளைவது உறுதியானது. இதையடுத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 14 நாட்களுக்குள், ஷில்லிங்போர்டு அப்பீல் செய்ய வேண்டும் என்றும் ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.

Add Comment