டிராவிட், லாராவுக்கு ரூ. 1.81 கோடி *ஐ.பி.எல்., ஏலத்தில் விலை நிர்ணயம்

: நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் டிராவிட், வெஸ்ட் இண்டீசின் ஓய்வு பெற்ற வீரர் லாரா ஆகியோர் “டாப்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ. 1.81 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2008 ம் ஆண்டு முதல், 8 அணிகள் பங்கேற்ற, “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டு நடக்கம் நான்காவது ஐ.பி.எல்., தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் பங்கேற்ற வீரர்களின் ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து, வரும் ஜன. 8 மற்றும் 9 ம் தேதிகளில் பெங்களூருவில் புதிய ஏலம் நடக்கிறது.
இதில் மும்பை இந்தியன்சின் சச்சின், போலார்டு, ஹர்பஜன், மலிங்கா, சென்னை சூப்பர் கிங்சின் தோனி, ரெய்னா, ஆல்பி மார்கல், முரளி விஜய், டில்லியின் சேவக், பெங்களூருவின் கோஹ்லி, ராஜஸ்தானின் வார்ன், வாட்சன் ஆகியோரை அந்தந்த அணிகள் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதனால் இவர்களைத் தவிர, வெளிநாடு மற்றும் இந்தியாவின் 416 வீரர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வீரரும் எந்தெந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் டிராவிட், கும்ளே, யுவராஜ், வெஸ்ட் இண்டீசின் கெய்ல் ஆகியோருடன் இங்கிலாந்தின் பிராட், ஆண்டர்சன், சுவான், பீட்டர்சன், இலங்கையின் தில்ஷன், ஜெயவர்தனா ஆகியோருக்கு அதிகபட்சமாக ரூ. 1.81 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வெஸ்ட் இண்டீசின் “ரன் மிஷின்’ பிரையன் லாரா (41), முதல் பிரிவில் இடம் பெற்றுள்ளது எல்லோருக்கும் வியப்பை தந்துள்ளது.
அடுத்து காலிஸ், முரளிதரன், யூசுப் பதான், ஜாகிர் கான், டெய்ட், சங்ககரா ஆகியோருக்கு ரூ. 1.36 கோடி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காலிஸ், முரளிதரனை பெங்களூரு அணி குறிவைத்துள்ளதாக தெரிகிறது.
கங்குலி இறக்கம்:
முதல் 3 தொடர்களில் நட்சத்திர வீரராக இருந்த கங்குலி, இப்போது 3வது பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். இவருக்கு குறைந்தது ரூ. 91 லட்சம் கிடைக்கும். தவிர, காம்பிர், ஹசி, போலிஞ்சர், உத்தப்பா, ஜெயசூர்யா உள்ளிட்ட 87 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நான்காவது பிரிவில் உள்ள தமிழகத்தின் அஷ்வின், மார்கல், தமிம் இக்பால் ஆகியோருக்கு குறைந்தபட்சமாக ரூ. 45 லட்சம் நிர்ணயம் Cialis No Prescription செய்யப்பட்டுள்ளது.
ஹைடன் இல்லை:
ஆஸ்திரேலியாவின் பாண்டிங், கிளார்க், ஜான்சன் ஆகியோர் வீரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. சென்னையின் பிளின்டாப், ஹைடன் ஆகியோரும் இதில் இல்லை. கடந்த 2008 தொடருக்கு பின் ஏற்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலால், அடுத்த இரு தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது. இது நான்காவது தொடரிலும் தொடர்கிறது.

Add Comment