கார் விபத்து: தப்பினார் காலிஸ்

கேப்டவுனில் நடந்த கார் விபத்தில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ், காயமின்றி தப்பினார்.
தென் ஆப்ரிக்க Buy Amoxil Online No Prescription அணியின் ஆல் ரவுண்டர் காலிஸ் (35). இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்து, ஆட்டநாயகன் விருது வென்றவர். நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது காரில் காலிஸ் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். காரை இவர் தான் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது வெயின்பர்க்கில் உள்ள வீட்டின் கேட் மீது பலமாக கார் மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. இதனால் காரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். பின் காலிசின் தோழி ஷமோனே ஜர்டிம் வந்து காலிசை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
நலமாக உள்ளார்:
இதுகுறித்து அணியின் மானேஜர் முகமது மூசாஜீ கூறுகையில்,”” இது லேசான விபத்து தான். இதனால் காரின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. காலிசிற்கு எந்தக்காயமும் ஏற்படவில்லை. அவர் நலமாக உள்ளார். இந்த சம்பவத்தால் காலிசின் நற்பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கட்டாயம் பங்கேற்பார்,” என்றார்.
காலிசின் ஏஜன்ட் டேவிட் ரண்டில் கூறுகையில்,”” விபத்து ஏற்பட்டது உண்மை தான். ஆனால் காலிஸ் காரை வேகமாக ஓட்டிச் செல்லவில்லை. மெதுவாகத்தான் சென்றார்,” என்றார்.

Add Comment