மங்களூர் விமான விபத்து: நீதி விசாரணை துவங்கியது

மங்களூரில் விமான விபத்து நடந்த இடத்தில் மத்திய அரசின் நீதி விசாரணை குழு விசாரணை துவக்கியது.
கடந்த மே 22ம் தேதி மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. online pharmacy no prescription இதில் 158 பேர் பலியானார்கள். மத்திய அரசு இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஏர்மார்ஷல் பூஷன் நீல்கந்த் கோகலே தலைமையில் ‘நீதி விசாரணை குழு’ அமைத்தது. இக்குழு நேற்று முன்தினம் மதியம் மங்களூர் வந்தது. விபத்து நடந்த இடத்தை 30 நிமிடங்கள் பார்வையிட்ட விசாரணைக் குழு, பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஓய்வுபெற்ற ஏர்மார்ஷல் பூஷன் நீல்கந்த் கோகலே கூறியதாவது: விமான விபத்து பற்றி கவனத்துடனும், அக்கறையுடனும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க அரசு அவகாசம் அளித்துள்ளது. விமானத் துறை டைரக்டர் ஜெனரல், யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் டிரான்ஸ்போர்ட், பாதுகாப்பு வாரியம் போன்ற பல்வேறு முகமைகள் விமான விபத்து பற்றி நடத்திய விசாரணை அம்சங்களை திரட்டுவோம். அடுத்த இரண்டு நாட்களுக்கு சாட்சிகளிடம் விசாரிப்போம்.

Add Comment