முன்னொரு காலத்துல நம்மூர்ல கல்யாணம் எப்படி நடந்தது தெரியுமா?

“வாங்க அண்ணே… என்னா ரெம்ப பரபரப்பாயிருக்கியோ.., கடைக்குள்ள வாங்கோ கொஞ்சநேரம் இருந்துட்டு ஒரு சாயாக்குடிச்சுட்டு போவலாம்” என்று சாயாக்கடை வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய மீத்தீனை அழைத்தார் மீராஷா, கடைவாசலில் நின்றவாறு.

பைக்கிலிருந்து இறங்கிய மீத்தீன் காலரில் இருந்த கர்ஷீப்பை எடுத்து முகத்தில் வடிந்த வேர்வையைத் துடைத்தவாறு சலாமுன் கூறியவாறு கடையினுள் நுழைந்தார். சாயாக்கடையில் இருந்தவர்கள் அனைவரும் அமைதியாக சலாமுக்கு பதில் கூறினாலும், மீராஷா மாத்திரம் சப்தமாக பதில் சொல்லிவிட்டு டீ மாஸ்டர் பக்கம் திரும்பி

“தம்பி.. சூப்பரா ஒரு டீ போடுங்க அண்ணனுக்கு..” என்றவர். மீத்தீன் அருகில்வந்து அமர்ந்தவாறு

“எங்கண்ணே கல்யாணவீட்டுக்கா..?” என்று கேட்க..

“ஆமப்பா.. ஒரே நாளிலே ஒரே நேரத்திலே ஏகப்பட்ட ஊட்ல கல்யாணம்.. எல்லோரும் தெரிஞ்சவங்க, ஊட்டுக்கு வந்து பத்திரிக்கை தந்து ‘கண்டிப்பா வரனும்னு’ சொல்றாங்க.. என்ன செய்றது. எல்லாவீட்டுக்கும் போகணும். கவரு வாங்குறதெ தவிர்க்;கிறாங்க என்றாலும் கல்யாணத்துக்கு வரணும்னு விரும்புறாங்க என்ன செய்றது போயித்தான் ஆகணும் தெரிஞ்சவங்களாயிற்றே…” என்றார் மீத்தீன்.

மீராஷாவின் சாயா ஆர்டருக்கு மீத்தீன் மறுப்பேதும் சொல்லாததால், மீத்தீன் சாயாக்கடை பெஞ்சில் அமர்ந்த சிறிது நேரத்தில் டீ மாஸ்டர் டீ யை மீத்தீனிடம் நீட்ட.. அதை வாங்கிக்கொண்டார் மீத்தீன். மீராஷா பேச்சைத் தொடர்ந்தார்.

“ஆமாண்ணெ.. நீங்க சொல்றது சரிதாம்ணே.., முன்னப்பின்ன தெரிஞ்சவங்க கூப்பிட்டா கல்யாணத்திலேபோய் கலந்துக்கிடறதுதான் நல்லது. இப்படித் தூரந்தொலையிலே வந்து.. தெரிஞ்சவங்க பாத்தவங்கனு எல்லாரையும் கூப்புடுறாங்கோ… அவங்களும் வந்து கலந்துக்கிடுறாங்கோ ஆனால், கூடப்பிறந்த அண்ணன் தம்பிய கூப்பிட மாட்டேங்கிறாங்கோ.., அப்படியே சிலபேரு தப்பு செய்திருந்தாலுமோ, அல்லது செய்யாவிட்டாலுமோ,

அல்லாஹ்வுக்கு பயந்து மறந்து.. மன்னித்து கூடப்பிறந்த அண்ணனே தங்கச்சியெ.. அல்லது மாமவே மருமகனே கூப்பிட்டாலும், சிலபேரு பிடிவாதமா கல்யாணத்திலே கலந்துக்கிடுறதெ மறுத்திடுறாங்கோ.. இப்படி நம்ம ஊர்ல நடக்கிற கல்யாணத்திலே எத்தனையோ கல்யாணத்திலே சேராத உறவுகள் எத்தனையோ பேர் இருக்காங்க.

நல்ல தொழுவுறாங்க வட்டாரத்திலே பெரிய மனுஷனாயிருக்காங்க ஊர்ல பயான் பன்றதுலே.. மேடைப்பேச்சுல நல்ல தெறமசாலியா பேசுறாங்க.. ஆனால் இந்தமாதிரி விஷயத்தில என்னமோ தெரியல உறவுகளே பிரிவதிலே அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் பயப்படுறவங்களா தெரியலே என்ன செய்றது?” என்று கூறினார் மீராஷா.

“சரியாத்தான் சொல்றே மீராஷா.., நான் இன்னைக்கு இதோடு ஐந்தாவது திருமணத்திற்கு வந்திருக்கேன். எல்லாக் கல்யாணவீட்டிலேயும் அவருசேரலே.., இவரு சேரலேனுதான் பேசிக்கிறாங்க.. இல்லாதவங்கள்ள யிருந்து இருக்கிறவங்கவரை லச்சக்கணக்கான ரூபாய்களே செலவு செய்து நூற்றுக்கணக்கான பக்கா அரிசி நூற்றுக்கணக்கான கிலோஇறச்சிகள் வாங்கி சமைச்சு ஆட்டோவுல அங்கும் இங்குமா ஆக்கித்தட்டிட்டு யார்யாரோ வந்து சாப்பிடுறாங்கோ யாரு அவசியமா வந்த கல்யாணத்திலே கலந்துக்கிடனுமோ அவங்கள நீக்கி வெச்சர்றாங்கோ அல்லது அல்லாஹ்வுக்கு பயந்து நடந்திடாம சிலரு உறவுகளெ துண்டிச்சிக்கிடுறாங்கோ.. சொந்தப்பட்டவங்கோ பந்தப்பட்டவங்கோ சாப்பிடாத வராத ஒரு விருந்து எந்த வகையிலே விருந்தாகும்னு இரண்டு தரப்புக்கும் தெரியமாட்டேங்குது..

நம்மூர்ல நடக்கிறது கல்யாணம்ங்கிறதே விடே ஆடம்பரமான விழானே சொல்லலாம். இன்றைய காலத்திலே நிறைய பசங்க இந்தமாதிரி ஆடம்பரமான கல்யாணத்தே விரும்பலேங்கிறது மட்டுமில்லே.. எல்லா சொந்த பந்தங்களும் பழைய பகைகளை மறந்து ஒண்ணா சேரனும்னு விரும்புறாங்க ஆனால் சில பெருசுகள்தான் பிடிவாதமா அவனைக்கூப்பிடக்கூடாதுன்னு இவனைக்கூப்பிடக்கூடாதுன்னு சொல்லுதுவோ, உறவுகளே துண்டுச்சுக்கிட்டு வாழ்றவங்களப்பத்தி அல்லாஹ்வும், ரசூலும் எவ்வளவோ எச்சரித்தும் இவர்கள் கேக்கிறதா தெரியலே.. அதுமட்டுமா..

‘அவ்வோ தாலாச்சோறு போட்டாஹோ.., இவ்வோ வாழிச்சோறு போட்டாஹோ.. அவ்வோ சுருளு வெச்சாஹோ.., இவ்வோ சேல துணிமணி எடுத்து தந்தாஹோனு’ Buy Doxycycline Online No Prescription பெத்தவங்களும் உடன் பிறந்த சகோதரிகளும் போடும் பட்ஜெட்டைப் பார்த்தால் இல்லாதவர் குடும்பத்துக்கே கல்யாணச்செலவுக்கீனு இரண்டு லகரம் வேண்டும்போல் தெரிகிறது, அப்புறம் எப்படி நபிவழிகாட்டிய முறைப்படி.. நாங்கோ கல்யாணம் நிச்சையத்திருக்கிறோம்னு கல்யாணப்பத்திரிக்கை தலைப்பிலே குறிப்பிட்டு காட்றாங்கோனு தெரியலே..

எல்லா விஷயத்திலுமே எளிமையாய் கடைபிடிக்கச் சொல்லும் இஸ்லாத்துல இருந்துக்கிட்டு பகட்டுக்காகவும், பாரம்பரியமா கல்யாணத்தைப்பத்தி ஊர்ல சொல்லப்படனும் ங்கிறதுக்காகவும் செய்யப்படுகிற கல்யாணத்துல என்ன பரக்கத்து இருக்கப்போவுது.., என்னா மீராஷா ஒன்னும் பேசமா ஓம்பாட்லயிருக்கே..” என்று ஊரில் நடந்துகொண்டிருக்கும் கல்யாணத்தைப்பற்றி ஒரு அலசல் அலசிமுடித்தார் மீத்தீன்.

“அண்ணே.. பெத்தவங்க ஆசைப்படுறதிலும், கூடப்பிறந்த புள்ளைங்க சொல்றதிலும் ஒன்னும் தப்பில்லையண்ணே.. உண்மைதானண்ணே சொல்றாங்கோ.. பெத்த புள்ளைங்கோ கல்யாணத்தே செறப்பா செய்யனும்னு பெத்தவங்க நெனைக்கிறதலையும், சோறு ரொட்டி வாங்கித்தின்ன ஊட்டுக்கு நம்மளும் அதே மாதிரி திரும்பக்குடுக்கனும்னு கூடப்பெறந்த புள்ளைங்க நெனைக்கிறதுலையும் என்னண்ணே தப்பிருக்கு.. இந்த ரெண்டுமில்லேனா கல்யாணம் மாதிரியே தெரியாதேண்ணே..” என்றார் ஆதங்கத்தோடு மீராஷா.

“பெத்தவங்க ஆசைப்படனும் எதுக்கு புள்ளைங்கோ சொர்க்கத்துக்கு போகனும்னு.., கூடப்பிறந்த புள்ளைங்கோ ஆசைப்படனும் தான்கூடப்பிறந்தவன் நல்லாயிருக்கனுமனு இந்த ரெண்டுல எதையாவது அவங்க செய்றாங்களா மீராஷா.. ஒரு நன்மைய செய்றதா பத்திரிக்கை அடிச்சு எல்லாரையும் அழைச்சிட்டு.. அவங்க செய்ற பாவத்துக்கு வந்தவங்க எல்லாத்தையும் சாட்சியாக்குறாங்களே.. இதுக்குலாம் என்ன காரணம்னு நெனைக்கிறே.. எல்லாம் துட்டு செய்ற கொழுப்பு.. பணக்காரன்ங்கிற பவுசு..

முன்னொரு காலத்துல நம்மூர்ல கல்யாணம் எப்படி நடந்தது தெரியுமா? மீராசா…, பருப்பு கடைஞ்சு கத்தரிக்கா ஆணம் வெச்சு சோத்தை ஆக்கி ஒரு சாப்பாட்டோடு கல்யாணத்தே முடிச்சாங்க ஆனா.. இப்போ அப்பிடியா கல்யாணம் நடக்குது ஒரு வாசல் மூடினா ஒன்பது வாசல் திறக்கும்னு சொல்வாங்களே அதுமாதிரி ஒருவேளை சாப்பாட்டை நிறுத்திட்டு பந்தக்கால் ஊனூன நாள்லயிருந்து பந்தல் அவுக்கும்வரை சாப்பாடு முடிஞ்சபாடுயில்லை.

ஊருபோற போக்கே பாத்தா ஊட்டைவித்துத்தான் கல்யாணம் பண்ணனும்போல் தெரியுது. அட என்னத்தே வித்தாவது கல்யாணத்தை முடிப்போம் ஆனால் உறவுகளைப்பேணாமலோ கல்யாணத்தே முடிக்கிறாங்கோ அதுலோ வருத்தமாயிருக்கு.. அல்லாஹ்தான் இந்த ஊரையும் இந்த ஊர்லவுள்ள மக்களையும் காப்பாத்தனும். அல்லாஹ்வுக்கு பயந்து நபிவழியெப்பேனி உறவுமுறைய பேணுறவங்களா ஆக்கனும். சரி மீராஷா நேரமாயிடுச்சு அப்போ நான் வரட்டா.. துவாச்செய் இன்ஷாஅல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்..” என்றவாறு அங்கிருந்து புறப்பட்டார் மீத்தீன்.

-ஊர் குருவி 

Add Comment