ஜான்சனிடம் இன்னொரு முறை ஏமாறமாட்டோம் – பீட்டர்சன்

ஆஸ்ட்ரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனிடம் இன்னொரு முறை தங்கள் அணி ஏமாறாது என்று ஆஸ்ட்ரேலிய அணிக்கு இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோசமாக வீசுகிறார் என்று பிரிஸ்பேன் டெஸ்டிற்கு அடுத்தபடியான அடிலெய்டில் டெஸ்ட் போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட மிட்செல் ஜான்சன் கடந்த வாரம் பெர்த் டெஸ்ட் போட்டியில் மீண்டும் கலக்கினார்.

இவர் முதல் இன்னிங்சில் வீழ்த்திய 6 விக்கெட்டுகளினால் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவி, ஆஸ்ட்ரேலியா தொடரை சமன் செய்ய நேரிட்டது.

இந்நிலையில் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் 4-வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இன்னொரு முறை மிட்செல் ஜான்சனிடம் நாங்கள் ஏமாற மாட்டோம் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

“அவர் ஸ்விங் செய்யப்போகிறார் என்பது எங்களுக்குத் Buy Bactrim தெரியும், நாங்கள் எங்களை அந்த ஸ்விங் பந்துக்காக தயார்படுத்தி வருகிறோம். அவர் திடீரென இவ்வளவு ஸ்விங் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” என்றார் பீட்டர்சன்.

பீட்டர்சன் பெர்த் டெஸ்ட் போட்டியில் ஜான்சன் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ.ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment