கடையநல்லூரைக் கலக்கிய பலே திருடன் கைது!

Buy Lasix Online No Prescription height=”300″ />கடையநல்லூரில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான்  இருக்கின்றது.இக்பால் தெற்கு தெருவில் உள்ள வீட்டில் சுமார் 63 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றது அப்பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் குறிப்பாக பெண்கள் பீதியில் உறைந்து போயிருந்தனர்.இதனால் அப்பகுதியில் உள்ள ஜமாஅத்தார்களும் இளைஞ்சர் பெருமக்களும் ஒன்றுகூடி இந்த திருட்டு சம்பவத்திற்கு முடிவு கட்டும் விதமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.அப்பகுதியில் உள்ள இளைஞ்சர்கள் தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவதாகவும்,ரோந்து பணியில் ஈடுபடுவோர்களின் பெயர்களை முறையாக காவல்துறையிடம் கொடுத்து அவர்களின் உதவியுடன் திருடனைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் முறையாக அறிவிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.இந்த அறிவிப்பின் மூலமாக பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
இந்த கண்காணிப்புக் குழு ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே நேற்று இரவு சுமார் 3.00 மணி அளவில் அட்டக்குளம் பகுதியில் வைத்து சந்தேகதிக்கும் விதமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரிக்கும்போது அவனது பெயர் மணிகண்டன்(வயது 27) எனவும்,அவனது தந்தை பெயர் பிச்சையா எனவும் தெரியவந்தது.
அவரைப் பிடித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இளைஞ்சர்கள்(எவர் கிரீன் குருப்ஸ்,நியூ சன்  பிரண்ட்ஸ் மற்றும் ஆலிம்ஷா தெரு இளைஞ்சர் அணி ஆகியோர்)திருடனை கடையநல்லூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.அவன் திருட்டு சம்பவம் நடந்த போது நான் ஊரிலேயே இல்லை எனவும் எனக்கும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.காவல்துறை ஆய்வாளர் அவர்கள் திருடனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இதிருடன் பிடிபட்ட சம்பவத்தால் இக்பால் நகர் பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.மேலும் திருடனைப் பிடிக்க உதவியாக இருந்த அந்த எவர் கிரீன் குருப்ஸ்,நியூ சன் பிரண்ட்ஸ் மற்றும் ஆலிம்ஷா தெரு இளைஞ்சர் அணி ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Add Comment