பாஸ்போர்ட் கட்டணம் கூடுகிறது!

இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளபடி, பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் எதிர்வரும் அக்டோபர் 1 முதல் அதிகரிக்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இதுவே முதல் விலையேற்றம் என்பது குறிக்கத்தக்கது. சாதாரண முறை விண்ணப்பங்கள் ரூ.500லிருந்து ரூ.1500 ஆகவும், தட்கல் வழி விண்ணப்பங்கள் ரூ.1000லிருந்து ரூ.3500 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.

வெளிநாடு வாழ் குடிமக்களுக்கான  பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சாதாரண முறையில் 40 டாலர்களிலிருந்து 75 டாலர்களாகவும் Buy cheap Lasix அல்லது 48 யூரோக்களிலிருந்து 60 யூரோக்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த கட்டண மாற்றங்கள் எதிர்வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

செலவினங்கள் கூடுதலாகி விட்ட நிலையில் இந்தக் கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது என்றும்

கடந்த 2002 ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் கட்டண உயர்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment