மஸ்கட்டில் தீ விபத்து புளியங்குடி வாலிபர் பலி

மஸ்கட்டில் நடந்த தீ விபத்தில் புளியங்குடி வாலிபர் பலியானார். புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி பாலவிநாயகர் கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (32). இவருக்கு திருமணமாகி தங்கம் என்ற மனைவியும், சக்திமாரி என்ற மகளும் உள்ளனர். இவர் பெயிண்டர். இவரது மனைவி கர்பமாக இருந்த போதே மஸ்கட்டில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பெயிண்டராக வேலைக்கு சென்றுவிட்டார். Buy cheap Cialis இவரும், இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து பைசியா நகரில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் இவர்கள் தங்கியிருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது இவர்கள் எழுந்து தப்பியோட முயற்சி செய்தனர். ஆனாலும் புகைமூட்டம் அதிகமாக இருந்ததால் இவர்களால் அறையைவிட்டு வெளியே வர முடியாமல் தீயில் கருகி இறந்தனர். இச்சம்பவம் குறித்து ஓமன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment