கடையநல்லூர் கான்ட்ராக்டரிடம் நகை, பணம், செல்போன் கொள்ளை

கடையநல்லூர் கான்ட்ராக்டரிடம் நகை, பணம், செல்போன்களை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பெரியதெருவை சேர்ந்த பிச்சையா முதலியார் மகன் பழனி(44). பில்டிங் கான்ட்ராக்டர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த மர்ம நபர் குத்துக்கல்வலசை அருகே எங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் நீங்கள் வந்து இடத்தை பார்க்க வாருங்கள் என அழைத்துள்ளார். இதனை நம்பி பழனி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மொத்தம் 3பேரும் சேர்ந்து காரில் குத்துக்கல்வலசை அருகே வந்துள்ளனர். போன் செய்த மர்ம நபரிடம் இடம் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி செல்ல வேண்டுமென அவர்களின் காரில் ஏறியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்றதும் அங்கு மறைந்திருந்த சுமார் 5 ர் கொண்ட கும்பல் இவர்கள் மூவரையும் தாக்கி விட்டு தங்க செயின், மோதிரம், செல்போன், 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை அடித்தும் உதைத்துள்ளனர். பின்னர் செயின், மோதிரம், செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அவர்களுடனேயே காரில் சொக்கம்பட்டி வரை சென்றுள்ளனர். அங்கு காரை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் இறங்கி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து Buy Lasix Online No Prescription பழனி கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜய்குமார் வழக்குபதிவு செய்து தொழில் அதிபரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Add Comment