ஈரானில் 11 ஜுன்துல்லாஹ் உறுப்பினர்களுக்கு தூக்கு

ஈரானில் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஜுன்துல்லாஹ் இயக்கத்தின் 11 உறுப்பினர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மாகாண சட்டத்துறை தலைவர் இப்ராஹீம் ஹமீதியை மேற்கோள்காட்டி ஈரானின் செய்தி நிறுவனமான இர்னா இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜுன்துல்லாஹ் இயக்கத்தின் உறுப்பினர்களான இவர்கள் கடந்த சில மாதங்களுக்கிடையே சிஸ்தான்-பலுசிஸ்தான் buy Amoxil online பிராந்தியத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என ஹமீது தெரிவிக்கிறார்.

கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி சபாஹர் நகரத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டிருந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 90 பேர்களுக்கு காயமேற்பட்டது. ஈரானில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜுன்துல்லாஹ் இத்தாக்குதலின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லையுடன் ஒட்டிய பகுதியில்தான் ஜுன்துல்லாஹ் செயல்படுகிறது. மார்க்க ரீதியாகவும், சட்டரீதியாகவும் எல்லா நடவடிக்கைகளையும் பூர்த்திச் செய்தபிறகே இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஹமீதி தெரிவிக்கிறார்.

Add Comment