கடையநல்லூர் வாசியின் படைப்பு, நபி(ஸல்)அவர்களை அறிமுகப்படுத்தும் குறும்படம்!

Bactrim No Prescription font-size: large;”>நபி(ஸல்)அவர்களை அறிமுகப்படுத்தும் குறும்படம்
கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் தயாரிப்பில் ட்ரூ விஷன் வழங்கும் ஒருதுளிக் கடல் என்ற குறும்படம் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்டு மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இதர மதச் சகோதரர்களுக்கு  நபி(ஸல்)அவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக படமாக்கப்பட்ட இக் குறும்படத்தில் வழக்கு எண் ஜெயபால் நடித்திருக்கிறார்.கதை திரைக்கதை வசனம் எழுதி இக்குறும்படத்தைகடையநல்லூர் வி.எஸ்.முஹம்மது அமீன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சி YOU TUBE ல்oru thuli kadal trailar
என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பாக அக்டோபர் 4 முதல் 15 வரை இவர்தான் முஹம்மத்(ஸல்) என்ற பரப்புரை இயக்கம் செயல்பட்டு வருகிறது.இந்த பரப்புரையையொட்டி இக்குறுந்தகடு 20 ரூபாய்க்கு கிடைக்கிறது.
கிடைக்குமிடம்
இஸ்லாமிக் பவுண்டேசன் ட்ரஸ்ட் (IFT)
138, பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை-12
தொலைப்பேசி:04426624401

Add Comment