பணத்துக்காக விளையாடாத சச்சின் *ரணதுங்கா புகழாரம்

பணம் கொழிக்கும் “டுவென்டி-20′ போட்டிகளை விட, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுபவர் சச்சின். பணத்துக்காக மட்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காதது தான், இவரது நீண்ட நாள் வெற்றியின் ரகசியம்,” என, இலங்கை அணியின் Buy cheap Amoxil முன்னாள் கேப்டன் ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 வது சதம் கடந்த சச்சினுக்கு, பல தரப்பில் இருந்தும் வாழ்த்து குவிகிறது. இவரை பாராட்டி ரணதுங்கா கூறியது:
கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருபவர் சச்சின். இது போன்ற வீரர் கிடைப்பது மிகவும் அரிது. இவர் கிரிக்கெட் போட்டிகளை பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை. இந்தக் குணம் தான் சச்சினின் நீண்ட நாள் வெற்றியின் ரகசியம்.
தற்போது “டுவென்டி-20′ போட்டிகள் தான் ரசிகர்களை அதிகம் கவர்கிறது. இதில் பணம் கொட்டுகிறது. இதில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்து சிகரத்தின் உச்சிக்கே சென்றார் சச்சின். இளம் வீரர்கள் இவரிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
டெஸ்ட் பாதுகாப்பு:
“டுவென்டி-20′ போட்டிகள் வருகைக்கு பின், டெஸ்ட் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. ஆனால், சச்சின் விளையாடும் வரை டெஸ்ட் போட்டி பாதுகாப்பாக இருப்பது உறுதி. நான் பிராட்மேனைப் பார்த்தது இல்லை. நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சச்சின் தான். பிராட்மேன் அவரது காலத்தில் சிறந்த வீரர்.
மீடியா விவாதம்:
சச்சின் தனது சாதனைக்காக விளையாடுகிறார். அவர் போட்டியை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய “மேட்ச் வின்னர்’ அல்ல என்ற கருத்து தவறானவை. இவை மீடியா கிளப்பிவிடும் விவாதங்கள். இக்கட்டான நேரங்களில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.
சேவை தேவை:
சச்சின் மிகவும் பண்பானவர், பணிவானவர். அவருடன் இணைந்து நானும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்பார் என்பதை அவரிடமே விட்டுவிட வேண்டும். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவரது பேட்டிங்கை தொடர்ந்து பார்த்து ரசிக்கலாம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டின் தூதராக அவரது சேவை, இந்த உலகிற்கு தேவைப்படும்.
இவ்வாறு ரணதுங்கா கூறினார்.

சானியா, செய்னா பெருமிதம்
சச்சின் சாதனை குறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறுகையில்,””சச்சின் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே நட்சத்திர வீரர். இவரது வாழும் இந்தக் காலத்தில் நானும் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்,” என்றார்.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் கூறுகையில்,””கடந்த 21 ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்று வரும் சச்சின், இப்போதும் அதிக ரன்கள் குவிக்கிறார். அவரது சாதனைக்கு முன், நான் சிறு குழந்தை தான். இன்னும் பல ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்று எதிர்காலத்தில், பல சாதனைகளை அவர் முறியடிப்பது உறுதி. இவருக்கு பாரத ரத்னா விருது பெற தகுதியுள்ளது,” என்றார்.

Add Comment